Coonoor Chopper Crash : ஹெலிகாப்டர் விபத்து : மின்வாரியத்திடம் விளக்கம் கேட்ட நீலகிரி காவல்துறை..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த இடத்தில் உயர்மின்னழுத்த கம்பி உள்ளதா? என்று மின்வாரியத்திடம் நீலகிரி காவல்துறையினர் விளக்கம் கேட்டுள்ளனர்

Continues below advertisement

குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக இந்தியா விமானப்படையின் ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில், தமிழக காவல்துறை சார்பிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement


விபத்து நடைபெற்ற குன்னூர் காட்டேரி பகுதியில் உயர்மின்னழுத்த மின்வாரிய கம்பி உள்ளதா? என்று மின்வாரியத்திடம் நீலகிரி மாவட்ட காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது. விபத்து நடைபெற்ற பகுதியில் அப்போது நிலவிய வானிலை நிலவரம் குறித்து விரிவாக அறிக்கை அளிக்க சென்னை வானிலை ஆய்வு மையத்திடமும் காவல்துறை சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், ஹெலிகாப்டர் விபத்தை செல்போனில் வீடியோ எடுத்த நபரின் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்வதற்கு அந்த வீடியோ கோவை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement