திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கட்டுப்பாட்டில் தான் தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது, டிஜிபி சைலேந்திர பாபு கட்டுப்பாட்டில் எதுவுமில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார். 

  


முன்னதாக, குன்னூர் - காட்டேரி பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அவதூறு வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்து தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை போசினார். 


அவதூறு வழக்கு தொடுப்பதில் தமிழக காவல்துறை பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்ற  குற்றச்சாட்டை முன்வைத்தார். யூடியூபர் மாரிதாஸின் பெயில் வழக்கை விசாரித்த நீதிபதி, ஒவ்வொரு நபருக்கும் சொந்த கருத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், தனி நபருக்கு வழங்கப்பட்ட கருத்து சுதந்திரம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், மாரிதாஸ்-ஐ விட 100 மடங்கு அவதூறு பேசிய திக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மரணத்தைக் கொண்டாடிய  சில பதிவுகளை நாங்கள் சேமித்து வைத்திருக்கிறோம். இவர்களெல்லாம் காவல்துறையினரின் கண்களுக்குத் தெரியவில்லையா?  என்று கேள்வி எழுப்பினார். 


 


 


    


மேலும், திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கட்டுப்பாட்டில் தான் தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது, டிஜிபி சைலேந்திர பாபு கட்டுப்பாட்டில் எதுவுமில்லை. இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதற்கும், செல்பி எடுப்பதற்கும் தான் டிஜிபி பதவி உள்ளது. வெளிப்படையாகவே சொல்கிறேன், தற்போதைய டிஜிபியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. திமுக அந்தந்த மாவட்டச் செயாளர்களின் கட்டுப்பாட்டிலும், ஐடி விங் கட்டுப்பாட்டிலும் தான் காவல்துறை உள்ளது. 


திமுக என்ற பெரு வணிக நிறுவனத்தின் திட்டங்களை செயல்படுத்தும் ஏவல்துறையாக காவல்துறை மாறியுள்ளது. பாஜக உறுப்பினர்  கல்யாண ராமன், மாரிதாஸ், கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் ஷிபின் ஷார்ப்பா ஆகியோரின் கைதுக்குப் பின்னால் திமுக  நிர்வாகிகள் தான் உள்ளனர். திமுக நிர்வாகிகள் காவல் துறை துணை கண்காணிப்பாளரைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.    டிஜிபி, சுகாதார செயலாளர் போன்ற தமிழகத்தில் உயர் அதிகாரிகள் கோபாலபுரத்து அடிமைகளாக மாறியுள்ளனர். வரும் ஆறு மாதங்களில்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலையும் நிலை  ஏற்படும் என்றும் தெரிவித்தார்.    


 






 


மேலும், இந்திய குற்றவியல் தண்டனை சட்டம்  என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்று தான்.  தமிழ் தெரிந்த ஒருவர் வேறு மாநிலத்தில் வழக்கு பதவி செய்தால் இங்குள்ளவர்களைக் கைது செய்ய காவல்துறைகளுக்கு அதிகாரம் இருக்கு. 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். வேண்டுமென்றே சும்மா கைவைத்தால், எங்கள் பொறுமையின் எல்லையைக் கடக்க வேண்டி வரும். இது, தமிழக அரசுக்கு நான் கொடுக்கும் எச்சரிக்கை" என்று அண்ணாமலை தெரிவித்தார்.