தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,35,389 ஆக அதிகரித்துள்ளது. இன்று, விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எந்த சர்வதேச பயணிகளிடமும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

  


குணமடைவோர் எண்ணிக்கை:  கடந்த 24 மணிநேரத்தில் 708 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,91,054 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98.3% குணமடைந்துள்ளனர்.


இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 36,612 ஆக அதிகரித்துள்ளது.  




சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,723 ஆக குறைந்துள்ளது. இதில், தோராயமாக, 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், ஈரோடுஆகிய மூன்று மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 24% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும்  நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 



பாதிப்பின் தீவிரத்தன்மை என்ன? தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சில தினங்களாக  குறைந்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தின் மொத்த தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 0.7 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 1 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே  கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,01,165 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 (5,54,96,026) கோடியாக அதிகரித்துள்ளது. 


கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, மத்திய சுதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷஸ் மாநிலங்களின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 




அக்கடிதத்தில், "எந்தவொரு மாவட்டத்திலும் நோய் தொற்று பரவல் அதிகரித்தால் அப்பகுதியை  கட்டுப்படுத்துதல் பகுதியாக அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த இரண்டு வாரங்களில் மிசோரம் கேரளா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில்  உள்ள எட்டு மாவட்டங்களில் நோய் தொற்று பரவம் பத்து சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. ஏழு மாநிலங்களில் உள்ள 19 மாவட்டங்களில் ஐந்து முதல், பத்து ஈதவீதம் வரை நோய்த் தொற்று உள்ளது.


எனவே, பத்து சதவீதத்திற்கும் அதிகமாக நோய் தொற்று பரவல் காணப்படும் இடங்களில் இரவு நேர கட்டுப்பாடு, மக்கள் கூடுவதற்கு தடை விதித்தல், திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதற்கு கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று ராஜேவஷ் பூஷன் அக்கடிதத்தில் குறிப்பிட்டார்.