Seeman Kayalvizhi: சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி கயல்விழி - சிக்கிய வீடியோ, நம்புற மாதிரி உருட்டி இருக்கலாமே மேடம்..
Seeman Kayalvizhi: சீமான் மனைவி கயல்விழியின் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து, அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Seeman Kayalvizhi: வீட்டில் ஒட்டப்பட சம்மனை நான் தான் கிழிக்க சொன்னேன் என, கயல்விழி சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் வீட்டில் தள்ளுமுள்ளு:
நடிகை புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, சீமான் வீட்டில் நேற்று போலீசார் சம்மன் ஒட்டினர். அடுத்த சிறிது நேரத்திலேயே சீமான் வீட்டு உதவியாளர், அந்த சம்மனை கிழித்து எறிந்தார். இதுதொடர்பாக விசாரிக்க சென்றபோது காவல்துறைக்கும், சீமான் வீட்டு பாதுகாவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது. அதன் முடிவில் சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் உதவியாளர் ஆகியோரை, காவல்துறையினர் கைது செய்தனர். அப்போதே வீட்டிலிந்து வெளியே வந்த சீமானின் மனைவி கயல்விழி, நடந்த சம்பவங்களுக்கு ”Sorry” என கூறியிருந்தார். ஆனாலும், போலீசார் அந்த இரண்டு பேரையும் அழைத்துச் சென்றனர்.
கயல்விழி செய்தியாளர் சந்திப்பு:
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கயல்விழி, ”போலீசாரின் சம்மனை கிழிக்க சொன்னது நான் தான். எடுக்க முடியவில்லை என்பதால் கிழித்து வரச்சொன்னேன். படிப்பதற்காகவே அதனை கிழித்து எடுத்து வரசொன்னேன். நான் செய்த ஒரே தவறு சம்மனை கிழிக்க சொன்னது தான். எங்கள் வீட்டு பாதுகாவலர் எந்த தவறும் செய்யவில்லை. காவல்துறையின் சம்மனை கையெழுத்திட்டு பெற தயாராகவே இருந்தோம். ஆனல், காவல்துறை ஈகோ அடிப்படையில் செயல்பட்டு வருவது தெரிகிறது” என தெரிவித்தார்.
வைரலாகும் வீடியோ:
இந்நிலையில் தான், நேற்றைய சம்பவத்தின் வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. அதில், “ கதவுக்கு பின்புறம் இருந்த சீமானின் மனைவி கயல்விழி, போலீசாரால் கதவில் ஒட்டப்பட்ட இரண்டு பக்கங்களை கொண்ட சம்மனை கிழிக்க உத்தரவிட்டுள்ளார். அதைதொடர்ந்து உதவியளர் அந்த சம்மனை துண்டு துண்டாக கிழித்து எடுத்துள்ளார். வார்த்தைகள் அச்சிடப்பட்டு இருந்த சம்மனின் சிறு துண்டு கூட இல்லாமல் அதனை கிழித்து, கையில் சுருட்டி குப்பையை போன்று வீட்டில் எடுத்துச் சென்றுள்ளார்” என்பதை காட்டுகிறது.
அதெப்படி சாத்தியம்?
மேற்குறிப்பிடப்பட்ட வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதன்படி, சம்மனை படிக்க வேண்டுமானால் அதனை இப்படி தான் கிழித்து எடுத்துச் செல்வார்களா? துண்டு துண்டாக எடுத்துச் சென்று எப்படி ஒட்டி படிக்க முடியும். ஓரிரு துண்டுகளாக கிழித்து இருந்தாலும் பரவாயில்லை. படிக்கவே முடியாத அளவிற்கு, பல சிறு துண்டுகளாக கிழித்து விட்டு தற்போது வந்து, படிப்பதற்காகவே கிழித்தோம் என சப்பை கட்டு கட்டுகிறீர்களா? என சாடி வருகின்றனர். மேலும், அந்த சம்மனை படிக்க விரும்பி இருந்தால், செல்போனில் ஒரு போட்டோ எடுத்துச் சென்று இருக்கலாம். ஆனால், அகற்ற வேண்டும் என்ற நோக்கோடு கிழித்து எறிந்துவிட்டு, சர்ச்சையானதும் படிக்க தான் கிழித்தோம் என முட்டுக்கொடுக்கிறீர்களா? எனவும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
சீமானுக்கே டஃப் கொடுக்கும் மனைவி?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதேநேரம், அவர் கூறும் கருத்துகள் பல நேரங்களில் மீம்ஸ்களாக உருவெடுத்து இணையத்தை கலக்கும். ஆமைகறி, பிரபாகரனிடம் ஆயுதப்பயிற்சி என இலங்கை பயணம் தொடர்பான சீமானின் பேச்சுகள் அனைத்து, இதெல்லாம் எப்படிப்பா சாத்தியம்? என இன்றளவும் இணையத்தில் கேள்விகளாகவே தொடர்கின்றன. அதேவகையில் தான், தற்போது படிக்க தான் சம்மனை கிழித்தோம் என்ற சீமானின் மனைவி கயல்விழியின் கருத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.