செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியில் நீதிமன்ற காவலை 21-வது முறையாக  நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், ஜூன் 14-ஆம் தேதி கைதான செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.







இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டக் கொண்டே வருகிறது. அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.


வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 20ஆம்  தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி குறித்து நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியது. எனவே, ஜாமீன் கிடைக்க அமைச்சர் பதவி இடையூறாக இருக்கக் கூடாது என்பதால், அண்மையில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்றும் நேற்று முன் தினமும் நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரும், அமலாக்கத்துறை வழக்கறிஞரும் தங்கள் வாதத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் பதில் வாதம் செய்ய வழக்கின் விசாரணை வருகிற 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க 


Dharmapuri Robbery: 4 கடைகளில் மேற்கூரையை உடைத்து ரூ.3.10 லட்சம் கொள்ளை; தருமபுரியில் தொடரும் கொள்ளையால் மக்கள் அதிர்ச்சி


முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கிக் கணக்குகள்; தற்காலிகமாக செயல்பட வருமானவரித்துறை தீர்ப்பாயம் ஒப்புதல்


Annamalai: தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும் தேதி மாற்றம்! காரணம் என்ன? அண்ணாமலை பேட்டி