தருமபுரி நகரில் பாத்திரக் கடைகள், மருந்தகம் உள்ளிட்ட நான்கு கடைகளில் மேற்கூரையை உடைத்து ரூ.3.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி நகரில் எஸ்.வி.ரோடு பகுதி எப்பொழுதும் போக்குவரத்து அதிகமாக, பரபரப்பு மிகுந்த பகுதி. இந்த பகுதியில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு எஸ்.வி.ரோட்டில் உள்ள இரண்டு பாத்திரக்கடைகள் மருந்தகம் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை உள்ளிட்ட நான்கு கடைகளில் மேற்கூரையை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை கடைகளை திறந்து பார்த்த போது நான்கு கடைகளில் பணம் வைத்திருந்த இடத்தில் பொருட்கள் சிதறியும், சில்லறை நாணயங்கள் சிதறி கிடந்ததை கண்டு கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆங்காங்கே பொருட்கள், சில்லரை ரூபாய் நாணயங்கள் சிதறிக் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர்கள், தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்த்திற்கு வந்த தருமபுரி நகர காவல் துறையினர் மேற்கூரை உடைக்கப்பட்ட நான்கு கடைகளில் உள்ளே நுழைந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் நான்கு கடைகளிலும் சேர்த்து 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மார்ம நபர்களால் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த திருடன், முகத்தில் கை குட்டை(கர்சீப்) கட்டிக் கொண்டு செல்போன் லைட் அடித்துக் கொண்டு கொள்ளையடிப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தருமபுரி நகர் பகுதியை ஒட்டி உள்ள குண்டல்பட்டி, சோகத்தூர் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு, இதே போல் ஏழு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். நேற்று இரவு தருமபுரி நகரில் உள்ள போக்குவரத்து மிகுந்த எப்பொழுதும் மக்கள் நடமாட்டத்தோடு பரபரப்பாக இருக்கும் எஸ்.வி.ரோட்டில் உள்ள நான்கு கடைகளில் மேற்கூறையை உடைத்து மூன்று லட்சத்து 10 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தருமபுரி நகரை சுற்றி போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள எப்பொழுதும் மக்கள் பரபரப்பாக இருக்கின்ற இடங்களில் தொடர்ந்து இது போன்ற கொள்ளை சம்பவம் நடைபெறுவது பொதுமக்கள் மற்றும் வணிகர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.