நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்,3பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால் ஆரம்பக்கட்ட சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குன்னூர் காட்டேரி என்ற இடத்தில் விபத்து நடந்த நிலையில் விபத்தை அறிந்த அக்கிராம மக்கள் நேரடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நெருப்பை அணைக்க முயற்சி செய்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் அருகில் தண்ணீர் எதுவும் கிடைக்காத நிலையில் பிளாஸ்டிக் குடத்தைக் கொண்டு நீர் பிடித்து நெருப்பை அணைத்துள்ளனர் அக்கிராம மக்கள். ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்ற நிலை எதுவும் தெரியாத நிலையில் கிடைத்த தண்ணீரை வைத்தே அவர்களை மீட்டுள்ளனர். இதற்கிடையே கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 14 பேர் Mi17 V5 என்ற ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டரானது கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத்தளத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.
ஆனால், பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோரின் நிலை என்னவென்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் தீயை அணைக்கும் காட்சிகளும், உயிருக்கு போராடியவர்களை மீட்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க..
Chopper Crash | பிரதமருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை; விபத்து குறித்து விளக்கியதாகத் தகவல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்