Rain Alert: இன்று 7 மாவட்டம்... நாளை 6 மாவட்டம்... காலண்டர் போட்டு வருது கனமழை!

அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் சில இடங்களில் அதிகாலையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

வானிலை மையத்தின் முழு அறிக்கை:

வடகிழக்கு பருவ காற்றின் (easterly trough) காரணமாக 08.12.2021: கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

09.12.2021: அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

10.12.2021.11.12.2021: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

12.12.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் குறைந்தபட்ச 31 வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வால்பாறை (கோயம்புத்தூர்), பிலவாக்கல் அணை (விருதுநகர்) தலா 5, சுரளகோடு (கன்னியாகுமரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) தலா 3 தக்கலை (கன்னியாகுமரி) 2, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பர்லியார் (நீலகிரி), சோத்துப்பாறை (தேனி), சிற்றாறு (கன்னியாகுமரி), பூதபாண்டி (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), சிவலோகம் கன்னியாகுமரி), தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement