இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற  Mi17 V5 ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. காட்டேரி பகுதியில் நடந்த இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.


இதுபோன்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துகள் இந்தியாவில் நடப்பது புதிதல்ல. இதற்கு முன், அதாவது கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இந்திய விமானப்படையின் 7 விமானங்கள் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்புத் துறையின் மத்திய இணையமைச்சர் அஜய் பட் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.




கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ராணுவ விமான விபத்துகள் விவரம் பின்வருமாறு:


மிராஜ் 2000 ரக விமானம் மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி (2021)ஒரு பயிற்சியின்போது விழுந்து நொறுங்கியது.


மிக் 21 ரக போர் விமானம் ராஜஸ்தானின் பார்மரில்  கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி (2021)  பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது.


மிக் 21 ரக போர் விமானம் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் கடந்த மே மாதம் 20ஆம் தேதி (2021) விபத்துக்குள்ளானது. ஒருவர் உயிரிழந்தார்.


மிக் 21 பைசன் ரக விமானம் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் கடந்த மார்ச் 17ஆம் தேதி (2021)  விபத்துக்குள்ளானது. ஒருவர் உயிரிழந்தார்.


மிக 21 பைசன் ரக விமானம்  ராஜஸ்தானின் சூரத்கரில் தரையிறங்கும் போது ஜனவரி 5 ஆம் தேதி (2021) விபத்துக்குள்ளானது.


அதேபோல், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏரோபாட்டிக் குழுவான சூர்யா கிரணின் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்தார். மேலும் ஏரோ இந்தியா நிகழ்ச்சிக்கான ஒத்திகையின்போது இருவர் காயமடைந்தனர்.


2017ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் அருகே பயிற்சியின்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் இறந்தனர்.


2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி விமான நிலையம் அருகே துணை ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 10 எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்கள் உயிரிழந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Chopper Crash Ooty LIVE: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தலைமை தளபதி பிபின் ராவத் குடும்பத்துடன் பயணித்தாக தகவல்!