கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது. அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலை பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். 


இதில் இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் தெரியவில்லை.




விபத்தை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் தமிழ்நாட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரும் இன்று குன்னூர் விரைகின்றனர். 










இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தை முதலில் நேரில் பார்த்த கிருஷ்ணசாமி என்பவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், என் பெயர் கிருஷ்ணசாமி. ஹெலிகாப்டரில் பெரும் சத்தம் வந்தது. சத்தம் வந்த பிறகு மரத்தில் பெரிய அளவில் நெருப்பு எரிந்தது.


அதன் பிறகு பெரிய மரத்தில் மோதி கீழே விழுந்தது.கீழே விழுந்த பிறகு கரும்புகை எழுந்தது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Chopper Crash Ooty LIVE: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தலைமை தளபதி பிபின் ராவத் குடும்பத்துடன் பயணித்தாக தகவல்!


Tamil Nadu Chopper Crash: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! அதிர்ச்சி காட்சிகள்