Tamilnadu Weather Updates: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளி , கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் , வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்நிலையில் அடுத்த வரும் நாட்களில் வானிலை சற்று மாறுபாடுடன் காணப்படுகிறது. இந்த தருணத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.


சென்னை வானிலை:


சென்னையை பொறுத்தவரை இன்று (15-03-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


நாளை (16-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


Also Read: TN Budget: இது வேற லெவல் அறிவிப்பா இருக்கே.! பட்ஜெட்டில் விண்வெளியில் புகுந்த தமிழ்நாடு...


Also Read: TN Budget: உலகெங்கும் ஒலிக்கப்போகும் தமிழ்! பட்ஜெட்டில் பணத்தை கொட்டும் தமிழ்நாடு அரசு: இவ்வளவா.!


Also Read: TN Budget 2025: பட்ஜெட் டாப் 20 அறிவிப்புகள்! புதிய விமான நிலையம், வேலைவாய்ப்பு, மெட்ரோ...


தமிழ்நாட்டின் வானிலை:



  • இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

  • 16-03-2025 மற்றும் 17-03-2025 ஆகிய நாட்களில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

  • 18-03-2025 மற்றும் 19-03-2025 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • 20-03-2025 மற்றும் 21-03-2025 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அடுத்த ஐந்து தினங்களுக்கு வெப்பநிலை முன்னறிவிப்பு:



  • 15-03-2025 மற்றும் 17-03-2025 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் உயரக்கூடும்.

  • 18-03-2025 மற்றும் 19-03-2025; தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

  • 15-03-2025 முதல் 19-03-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும்.


24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:



  • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

  • கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.

  • கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்);

  • அதிகபட்ச வெப்பநிலை:- வேலூர்: 38.4° செல்சியஸ்

  • குறைந்தபட்ச வெப்பநிலை: கரூர் பரமத்தி: 19.0° செல்சியஸ்

  • கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

  • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

  • வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-38° செல்சியஸ், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34-35° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-34 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.