கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி மருமகளை கொன்ற மாமியாருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திநகர் மேட்லி 2வது தெருவைச் சேரந்தவர் சாகுல் ஹமீது. இவருக்கும் ஷாகின் என்ற பெண்ணுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஷாகின் தனது கணவர், மாமனார், மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே கணவர் சாகுல் ஹமீதுடன் எப்போதும் அவரது தாயார் தாஜ் நிஷா நெருக்கமாக இருக்கிறார் என உறவினர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து தாஜ் நிஷாவுக்கு தகவல் தெரியவந்துள்ளது.
4 மாவட்டங்களில் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை - முதல்வர் உத்தரவு!
இதை தவறாக புரிந்து கொண்ட தாஜ் நிஷா, மகனை தன்னிடம் இருந்து பிரித்து விடுவாரோ என பயந்து ஷாகினிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஷாகினை கொலை செய்ய திட்டமிட்ட தாஜ் நிஷா கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, தனது அறையில் இருந்த ஷாகினின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிவிட்டு வெளியே தப்பித்து வராதவாறு கதவை பூட்டிவிட்டார். ஷாகினின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். ஆனால் சிகிச்சைப்பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி டி.எச்.முகமது பாருக் முன்னிலையில் நடைபெற்று வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜராஜ சிறப்பு அரசு வழக்கறிஞர், பி. ஆர்த்தி ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி “தாஜ் நிஷா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன். மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அதில் 7500 ரூபாயை ஷாகினின் தந்தை நயினா முகமதுவுக்கு வழங்க வேண்டும். மேலும் அவருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆயக்குழு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
News Headlines : சென்னை திடீர் கனமழை... இந்தியா வெற்றி... சிறுவன் கவலைக்கிடம்... இன்னும் பல!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்