அட.. நம்ப பக்கத்து வீட்டு பொண்ணு... என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வெளி உலகிற்கு எண்ட்ரி கொடுத்த ப்ரியா பவானி சங்கர் தற்போது ஹோலிவுட்டில் ஒரு முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சாந்தமான முகத்தாலும், சவுகரியமான நடிப்பாலும், சப்தமில்லாத சிரிப்பாலும் அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் ப்ரியா பவானி சங்கர் இன்று தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஊடகத்துறையில் நுழைந்த பிறகு வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். விஜய் டிவி சீரியல் தொடரான கல்யாணம் முதல் காதல் வரையில் நடித்து தனக்கென இடத்தை பிடிக்க ஆரம்பித்தார். 2017 ஆம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானர் ப்ரியா பவானி சங்கர். அதற்காக அவர் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான SIIMA விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அதையடுத்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் மாமாவை காதலிக்கும் பெண்ணாக அசத்தியிருப்பார். அவரின் காதல் ஆழத்தை திருமணம் செய்து கொள்ள மறுக்கும் மாமாவின் மீது அனல் பறக்கும் கோபத்தின் வாயிலாக வெளிப்படுத்தியிருப்பார். 2019 ஆம் ஆண்டு அவர் எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும் 2020ஆம் ஆண்டு மாஃபியா: அத்தியாயம் 1 லும் நடித்தார்.
அதைத்தொடர்ந்து இந்த 2021 ஆம் ஆண்டு ப்ரியா பவானி சங்கருக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் நடித்த‛களத்தில் சந்திப்போம்' கலவையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு பின், ‛ஓ மணப் பெண்ணே'வை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடினர். தொடர்ந்து ஓ.டி.டி.யில் வந்த ‛பிளட் மணி' உணர்வுப்பூர்வ படமாக அமைந்துள்ளது. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் எவ்வளவு சூதனமாக இருக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தியுள்ளது. இதிலும் ப்ரியா பவானி சங்கரின் எதார்த்த நடிப்பு நெகிழச் செய்துள்ளது.
தமிழ் மட்டுமில்லாம தெலுங்கிலும் ப்ரியா பவானி சங்கர் களமிறங்கியுள்ளார். அங்கு தமிழில் அறிமுகமானதை விட அவருக்கு அதிக சம்பளமாம். அருண் விஜய் உடன் ‛யானை', தனுஷ் உடன் ‛திருச்சிற்றம்பலம்', பொம்பை, ருத்ரன் உட்பட சில படங்கள் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன. தெலுங்கில், நாக சைதன்யா, மோகன்பாபு மகன் மேனாஜ் உடன், நடிகர் பிரபாஸ் தயாரிப்பில் கமிட் ஆகியுள்ளார்.
தமிழில் விஷால் கூட ஒரு படம் ஜெயம் ரவி கூட ஒரு படம் இந்தியன் 2 ஆகியவற்றை கைவசம் வைத்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.
இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் போ இன்று நீயாக பாடலை பாடி படுத்துக்கொண்டே பாடி விருந்தளித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.