தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், ராமநாதபுரம்,சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
13.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.08.2023 முதல் 19.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சாத்தூர் (விருதுநகர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) தலா 7, செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), செட்டிகுளம் (பெரம்பலூர்), லால்குடி (திருச்சி) தலா 6, திருப்போரூர் (செங்கல்பட்டு), செய்யாறு (திருவண்ணாமலை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மரக்காணம் (விழுப்புரம்), முத்துப்பேட்டை (திருவாரூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), அரிமளம் (புதுக்கோட்டை), போளூர் (திருவண்ணாமலை) தலா 5, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), ஆரணி (திருவண்ணாமலை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), தொழுதூர் (கடலூர்), ராணிப்பேட்டை, அதிராமபட்டினம் (தஞ்சாவூர்) தலா 4, பெரம்பலூர், லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), புதுக்கோட்டை, மணம்பூண்டி (விழுப்புரம்), நன்னிலம் (திருவாரூர்), மதுரை விமான நிலையம், கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), எட்டயபுரம் (தூத்துக்குடி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), பரமக்குடி (ராமநாதபுரம்), எறையூர் (பெரம்பலூர்), மலையூர் (புதுக்கோட்டை), எம்ஜிஆர் நகர் (சென்னை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), பாலவிதிதி (கரூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), நாகப்பட்டினம் தலா 3,
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க