Breaking LIVE : வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மா.வீ.விக்ரமவர்மன் Last Updated: 21 Oct 2022 01:31 PM
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்களுக்கு விடுமுறை

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றால் 270 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

Breaking Live: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : 4 காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய 4 காவல்துறை அதிகாரிகளை டி.ஜி.பி. சைலேந்திர பாபு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Breaking live: ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் தொட்டியிலிருந்து சடலங்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 1.5 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவு 1.5 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு - கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிப்பு

மறைமலை நகரில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டதால், செங்கல்பட்டு - கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

27 பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம்

தமிழ்நாட்டில் 27 பல்கலைகழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. 

சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை

சென்னை புளியந்தோப்பில் மது அருந்தும் தகராறின்போது ரவுடி லொடங்கு மாரியை அவரது நண்பர்கள் வெட்டிக் கொன்றனர். 

Breaking LIVE : இந்திய கடற்படை துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறை மீனவர் காயம்

தெற்கு மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் மயிலாடுதுறை மீனவர் காயம் அடைந்தார். காயமடைந்த மீனவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படகு நிற்காமல் சென்றதால் சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை : செஞ்சியில் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

செஞ்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆட்டுச்சந்தையில் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று 21/10/2022 ஒரு நாள்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதா அவர்கள் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு

Background

தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூ மாவட்டடதில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. 

அதேபோல், மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

சென்னையில், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், ஈக்காட்டுத்தாங்கல், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், விமானநிலையம், குரோம்பேட்டை, கொளத்தூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.