Christmas Celebration: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி,  தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:


இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள் செவ்வாய்க்கிழமை இரவு மின்விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான பண்டிகை சூழலை கொண்டிருந்தது. தேவாலயங்கள் மற்றும் சந்தைகள் துடிப்பான விளக்குகள், மின்னும் நட்சத்திரங்கள் மற்றும் அழகான தொங்கும் தொட்டில்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இயேசு பிரான் பிறந்த நிகழ்வை குறிக்கும் தொழுவம் உள்ளிட்ட குடில்களும் அமைக்கப்பட்டு இருந்தன.  மகிழ்ச்சியான நிகழ்வைக் குறிக்க சமூகங்களை கடந்து மக்கள் ஒன்றுகூடியதால் கொண்டாட்டம் நிறைந்து காணப்பட்டது. தேவாலயங்கள் பிரமிக்க வைக்கும் அலங்காரங்களால் ஆர்பரித்தன. நள்ளிரவில் அங்கு குடும்பம் குடும்பமாக கூடிய மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் நள்ளிரவில் அதிகளவிலான மக்கள் குவிந்தனர். அதொடு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்று இறைவழிபாடு நடத்தினர். இதையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



நாடு முழுவதும் உற்சாகம்