2024 ஆம் ஆண்டு ஏலம் முடிவு அறிவிக்கும் வரை தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து , எந்த தகவலும் வரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


மத்திய அரசு செய்ய பரிந்துரை:


டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. பல்லுயிர் பாரம்பரிய தலம் உள்ள இடத்தில் சுரங்கம் அமைய இருப்பதாக கருத்துருக்கள் வந்ததாகவும், இந்நிலையில் அப்பகுதிகளை தவிர்த்துவிட்டு, இதர பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.  மேலும், 2024 ஆம் ஆண்டு ஏலம் முடிவு அறிவிக்கும் வரை தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து , எந்த தகவலும் வரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


அரிட்டாபட்டி:


மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழ்நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் மேலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பாரம்பரிய சின்னங்கள், இயற்கை வளங்கள், பல்லுயிர் தளங்கள் மற்றும் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன. 


Also Read: ICC 2025 Schedule: இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் எப்போது?; ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை அட்டவணை வெளியீடு


வெடித்த போராட்டம்


இதனை கண்டித்து, டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். முல்லைப் பெரியாறு ஊருக்கு போக பாசன விவசாய பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக, பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் உள்ள மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, கிடாரிப்பட்டி அ.வல்லாளப்பட்டி நரசிங்கம்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். 
டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேள்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார். 


மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவியிலும் , டங்ஸ்டர் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. 



இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பான இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.