வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளை கேட்பது சரியில்லை, அந்த காட்சிகள் தீவிரவாதிகள் கையில் கிடைத்தால் என்ன ஆகும்.
”உங்களது உறவினர் வீட்டில் சோதனையா? ”
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் , உங்களது உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அண்ணாமலை தெரிவித்ததாவது, கொங்கு பகுதிகளை பொறுத்தமட்டில் , அனைவரும் எனது உறவினர்கள்தான். நானும் செந்தில்பாலாஜியும் உறவினர்தான். ஜோதிமணி அக்காவும் உறவினர்தான், அரசியல் வருவதற்கு முன்பு அவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுள்ளேன்.
எனது குடும்பமோ, ரத்து சொந்தமோ உள்ள உறவுகள் குறித்து கேட்டால் நியாய்ம் உண்டு. வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நபர் , எனக்கு ரத்த சொந்தம் இல்லை. எனது உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையால், நான் வருமான வரித்துறைக்கு போன் செய்தேனா என்றால், இல்லை. கடந்த ஆண்டு , வரிமான வரித்துறைக்கு ஆளானவர்களில் பாதிபேர் உறவினர்தான்.
”என் வீட்டில் சாப்பிட்டுள்ளார்”
எதிரும் புதிருமாக இருக்கும் செந்தில்பாலாஜியும் நானும் உறவினர்தான். அரசியல் வருவதற்கு முன்பு செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார் . அதற்காக, ஏதேனும் தயவுதட்சனை பார்க்கிறேனா என்றால் இல்லை. வருமான வரித்துறை சோதனையில் தலையிட்டால்தான் தவறு என அண்ணாமலை தெரிவித்தார்.
ஆல் பாஸ் முறை ரத்து:
கல்வித் தரத்தை மேம்படுத்தவே ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் தேசிய அளவில் 2018-ல் AISER அறிக்கைப்படி, 3ஆம் வகுப்பில் 22 சதவீதக் குழந்தைகளுக்கு மட்டுமே அடிப்படைக் கழித்தல் தெரிந்து இருந்தது. கேரளாவில் அதிகபட்சமாக 45% குழந்தைகளுக்கு தெரிந்திருந்தது. மொத்தத்தில் தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கணிதத் திறன் குறைவாக இருந்தது.
ஆங்கிலப் பாடத்தில் மட்டும் தேசிய சராசரியைவிட தமிழகத்தில் அதிகமாக உள்ளனர். 2024 என்சிஇஆர்டி ஆய்வுப்படி, 3ஆம் வகுப்பில் பாதிப்பேருக்கு தமிழை சரியாக வாசிக்கத் தெரியவில்லை. 5-ல் ஒருவருக்கு தாய்மொழியில் புலமை இல்லை. அந்த அளவுக்குத்தான் கல்வித்தரம் இருக்கிறது. அதனால் அதை மேம்படுத்த வேண்டும்.
1980களில் எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதற்காக ஆல் பாஸ் கொண்டுவரப்பட்டது. ஆனால் 2024-ல் எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு வந்து, அடிப்படைக் கல்வியை படிக்க வேண்டும். அதனால்தான் மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.