தென்காசி மாவட்டம் பிரானூரில் பார்டர் பரோட்டா கடை என்ற பெயரில்  உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகமானது பரோட்டா உணவுக்கு மிகவும் பிரபலம் என்று கூறப்படுகிறது. 


தென்காசி வழியாக செல்ல கூடியவர்கள், பலரும் இந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு செல்வர். மேலும் குற்றாலம் நீர்வீழ்ச்சி செல்வோரும், இந்த உணவகத்திற்கு சென்று பரோட்டாவை ருசித்து விட்டு வருவர். 


கடைக்கு சீல்:


இந்நிலையில், இந்த உணவகத்தில், கலப்படம் மற்றும் கெட்டுப்போன உணவுப்பொருட்களை கொண்டு சமைப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது. அதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கடைக்கு சென்று சோதனை செய்தனர். 


புகாரையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பார்டர் பரோட்டா கடை குடோனில் சோதனை நடத்த சென்றனர். 


ஆனால் குடோனை சோதனை நடத்த, கடை உரிமையாளர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, குடோனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். 


இதையடுத்து,  தென்காசி பிரானூரில் பார்டர் பரோட்டா கடை குடோனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Also Read: ABP Impact: ”ABP செய்தி எதிரொலி”: அரசு கூர்நோக்கு இல்லத்தில் பலியான சிறுவனின் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு…


Also Read: அஞ்சல் தேர்வில் தமிழ்நாடு தேர்வர்கள் தீர்வைப் பயன்படுத்தி உடனே விண்ணப்பியுங்கள் - எம்பி சு.வெங்கடேசன்…