குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெற்றி பெற்றவர் திரௌபதி முர்மு. ஒடிஷாவின் ராய்ரங்கப்பூரில் பிறந்தவர் திரௌபதி முர்மு. கடந்த 1997ஆம் ஆண்டு, ராய்ரங்கப்பூர் நகரப் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் திரௌபதி முர்மு. அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வெற்றி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






ஜனாதிபதி திரௌபதி முர்மு டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு 11 :50-க்கு வருகிறார். தொடர்ந்து 12:15 -க்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மீண்டும் 2:00 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் செல்கிறார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 3:20 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து விடுதியில் ஓய்வெடுத்து பின்னர் 5:45 மணிக்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் பங்கு பெறுகிறார். தொடர்ந்து 19ஆம் தேதி காலை 9 :25 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையம் சென்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.



 

இது குறித்தி ஈஷா வட்டாரங்களில் விசாரித்தோம்..,” தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவலை நாங்கள் வெளியிடவில்லை. நிகழ்ச்சி நடக்கும் சில நாட்டுகளுக்கு முன்னர் தான் இந்த தகவல் வெளியாகும்” என தெரிவித்தனர்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண