தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டும் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க உத்தரவிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1627 நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு இலவச பொங்கல் வெட்டி சேலைகள் வழங்கப்பட்ட நிலையில், அப்போது இலவச வேட்டி சேலைகள் பெறாத பொதுமக்கள் உள்ளனர். அவர்கள் தற்பொழுது அவர் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் அவ்வப்போது சென்று இலவச வேட்டி சேலை பெற்று வருகின்றனர்.


 




குறிப்பாக இதில் திருவண்ணாமலை சுற்றியுள்ள கிராமங்களில் தமிழ்நாடு அரசின் இலவச பொங்கல் வேட்டி சேலைகளை பெற முடியாதவர்களின் பொது மக்களின் வேட்டி சேலைகள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இரவு காவலராக தற்காலிகமாக பணிபுரிந்து வருபவர் வட ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துவாரகேசன் வயது (28) இவர் 7 ஆண்டுகளாகமாக தற்காலிக இரவு காவலராக பணிபுரிந்து வருகிறார். துவாரகேசன் நேற்று முன்தினம் இரவு தனது கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் நண்பருமான பரசுராமன் வயது (30) இவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்டோவை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வர கூறியுள்ளார்.


 


 




 


ஆட்டோவுடன் வந்த பரசுராமன் உதவியோடு நேற்று இரவு வட்டாட்சியர் அலுவலக குடோனில் இருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த 4000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்ககூடிய பொங்கல் இலவச வேட்டி சேலைகளை ஆட்டோவில் கடத்திக்கொண்டு மங்கலம் வழியாக இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது மறுநாள் அதிகாலை ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோவை மடக்கி பிடித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து, திருடப்பட்டிருந்த இலவச வேட்டி சேலை உள்ளிட்ட ஆட்டோவுடன் பறிமுதல் செய்து இருவரையும் திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.


இதுகுறித்து திருவண்ணாமலை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் இரவு காவலர் துவாரகேசன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பரசுராமன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய இலவச வேட்டி சேலைகளை அதனை காவல் காக்கும் காவலாளி திருடிய சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.