நீட் தேர்வுக்கு எதிரான அரசியல், சட்ட, மக்கள் போராட்டம் தொடரும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ளதை அடுத்து, அடுத்ததாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை அனைத்துக் கட்சி கூட்டம் 8ஆம் தேதி கூட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

  


அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் தலைமையில் கூடிய கூட்டத்தில், திமுக சார்பில் துரைமுருகன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாஜக சார்பில் வானதி சீனிவாசன், அதிமுக சார்பில் விஜயபாஸ்கர், மனோஜ் பாண்டியன், , மதிமுக சார்பில் சதன், பாமக சார்பில் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் ஈஸ்வரன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்பதால் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தேன்.


மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில உரிமையை மத்திய அரசு பறிப்பதாக கூறுவதை ஏற்கவில்லை. சமூக நீதிக்கு எதிராக நீட் இருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பான ஒன்று. இந்தத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு பாதிக்கப்பட்டவில்லை.


ஆரம்பத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டபோடு சில பிரச்னைகள் இருந்ததை மறுக்கவில்லை.நீட் தேர்வு வருவதற்கு முன் அரசு பள்ளி மாணவர்கள் குறைவாகவே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.


நீட்டால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதாக கூறுவதும் உண்மைக்கு புறம்பான ஒன்று. நீட் தேர்வுக்கு முன்பு அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள் என்பது குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றையும் கேட்டிருக்கிறோம். தனியார் மருத்துவ கல்லூரிகள் கட்டண கொள்ளை நடத்தி வந்ததை நீட் தேர்வுதான் தடுத்து நிறுத்தியிருக்கிறது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: நீட் மசோதா விலக்கு : முதல்வர் தலைமையில் தொடங்கியது அனைத்துக்கட்சி கூட்டம்


படப்பை குணாவின் ஆதரவாளரான விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கைது..!


Actor Sathyaraj Corona Positive | நடிகர் சத்யராஜ் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி.. பிரார்த்திக்கும் ரசிகர்கள்..