மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை நடத்தி வருகிறது. ஆனால், நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் அதன்மீது இதுவரை மேல் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.