கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை முற்றுகையிட்ட மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்ப, மாணவி அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு கருத்து தெரிவித்திருக்கிறார்.


”ஹிஜாப் அணிவது, அணியக்கூடாது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என்னைப் பொறுத்தவரை, பள்ளிக்கூடம் செல்லும்போது பள்ளி சீருடையை அணிந்து செல்ல வேண்டும். பள்ளிக்கூட நுழைவு வாயில் வரை ஹிஜாப் அணிந்து செல்லலாம். ஆனால், பள்ளிக்குள் செல்லும்போது எந்த ஒரு ஜாதியையும், மதத்தையும் உள்ளே கொண்டு செல்லாமல், பள்ளிக்கூடத்தின் விதிமுறைகளை பின்பற்றி பள்ளி சீருடையை அணிந்து செல்ல வேண்டும். நானும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவள்தான். நான் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கூடம் சென்றதே இல்லை. ஹிஜாப் தவறு என்றால் காவித்துண்டு, நீலத்துண்டு அணிவதும் தவறுதான்.” என தெரிவித்திருக்கிறார்.




மேலும் படிக்க: Bombay HC: “பொதுவெளியில் ஆண்மையற்றவன் என்றால் எந்த கணவருக்கு கோவம் வராது” - மும்பை உயர்நீதிமன்றம்












ஹிஜாப் பிரச்னை தீவிரமாக, கடந்த பிப்ரவரி 7 அன்று கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதி அளிக்கப்பட்டது. அதேநேரத்தில் அவர்கள் தனியாக வேறொரு வகுப்பில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்படவில்லை. இதனால், முஸ்லிம் மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்.  உரிய நேரத்தில் விசாரிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண