தஞ்சாவூர் மாணவி தற்கொலை தொடர்பான விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


இந்த வழக்கானது வருகின்ற திங்கட்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பேலா எம் திரிவேதி ஆகியோர் விசாரிக்க இருக்கின்றனர். 


முன்னதாக, தஞ்சை மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பள்ளியில் பயின்று வந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார். பள்ளி நிர்வாகம் அவரை மதம்மாறச் சொல்லி துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. மாணவி உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களான முருகானந்தம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.



இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில்தான், சி.பி.ஐ. விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் விஸ்வரூபமானதைத் தொடர்ந்து தஞ்சை எஸ்.பி. முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார்.


மேலும் படிக்க: ''போர் அடிக்குதுனு ரெண்டு புள்ளி வச்சேன்.. 7.47 கோடி ஓவியத்தை நாசம் செய்த செக்யூரிட்டி!


அவரது விசாரணையில் மாணவியை மதம்மாறச் சொல்லி வற்புறுத்தி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது என்று எஸ்.பி. ரவளிப்பிரியா கூறினார். மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையிலும் மதம்மாற்றச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று தெரியவந்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.


மேலும், மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக வல்லம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையிலும் மாணவியின் பெற்றோர்களான முருகானந்தம், சித்தி சரண்யா, மாணவி பேசுவது போல வைரலான வீடியோவை எடுத்தவர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். மேலும், மாணவி பேசியதாக வைரலான வீடியோவை எடுத்த செல்போன் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆய்விற்காக சென்னையில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


மேலும் படிக்க: 2 வருடமாக மூதாட்டியை காணோம்.. ஊருக்கும் போகல.. கதவைத் தட்டிய போலீசாருக்கு பகீர் ஷாக்.!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண