Actor Vadivelu Covid 19 Positive: S Gene ட்ராப் உறுதியானது.. வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்று?

Vadivelu Covid 19 Positive: நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வைகை புயல் வடிவேலு(Vadivelu). கோலிவுட்டில் உச்சபட்ச ஃபார்மில் இருந்த அவர் அரசியல் மேடை ஏறிய பிறகு தனது ஃபார்மிலிருந்து இறங்கினார்.

Continues below advertisement

அதன் பிறகு அவரை எந்தத் தயாரிப்பாளரும், இயக்குநரும் அணுகவில்லை. இதனால் கிட்டத்தட்ட 10 வருடங்கள் வனவாசம் இருந்தார் என்றே கூறலாம்.

அவர் 10 வருடங்கள் திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் தொலைக்காட்சியிலிருந்து, சமூகவலைதளங்கள்வரை அவரே ஆட்சி செய்துகொண்டிருந்தார். குறிப்பாக நாட்டில் நடக்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் அதற்கு வடிவேலு பேசிய வசனமோ, அவரது முக பாவனைகளோ பொருந்திப்போகும். இதனால் வடிவேலு விரைவில் மீண்டும் நடிக்க வேண்டுமென ரசிகர்கள் மட்டுமின்றி, திரைத்துறையினரே விரும்பினர்.

இந்த சுழலில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார். நீண்ட நாள்கள் கழித்து வடிவேலு களமிறங்குவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும், மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் இணையும் படத்திலும், சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்திலும் வடிவேலு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வடிவேலு மீண்டும் ஃபார்முக்கு திரும்பிவிட்டார் என பலர் கூறிவருகின்றனர்.

இதற்கிடையே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசை அமைக்கும் பணிக்காக சந்தோஷ் நாராயணன், வடிவேலு, சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர்.

பயணத்தை முடித்துவிட்டு வடிவேலு நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.  அவருக்கு செய்யப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறியாக கருதப்படும் எஸ் ஜீன் டிராப் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Actor Parthiban: ‛முதல் தமிழ் நடிகன் நான் தான்...’ கோல்டன் விசா பெற்ற மகிழ்ச்சியில் நடிகர் பார்த்திபன்!

83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!

Watch Video: ஷூட்டிங் முடித்து தினமும் பத்து மைல் ஜாக்கிங்.. வைரலாகும் ஆர்யாவின் உடற்பயிற்சி வீடியோ..!

Continues below advertisement
Sponsored Links by Taboola