ஐக்கிய அரபு அமீரகம் 10 வருடம் செல்லத்தக்க கோல்டன் விசாவை தொழிலதிபர்கள், முதலிட்டாளார்கள், பிரபலங்கள், விஞ்ஞானிகள், திறமைமிக்க மாணவர்கள் ஆகியோருக்கு வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபனுக்கும் கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கெளரவப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன் , “ Golden visa -இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சிஎடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள்.VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விசாவை பெற்றதன் மூலம், கோல்டன் விசாவை பெறும் முதல் நடிகர் என்னும் சிறப்பை பெற்றிருக்கிறார்.
முன்னதாக, பிரபல நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பாடகி சித்ரா, நடிகை த்ரிஷா ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உட்பட பல பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை ஏற்கனவே பெற்றிருந்த நிலையில் தற்போது நடிகர் பார்த்திபனுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
கோல்டன் விசா
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வகையிலான பிரேத்யக விசா ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தங்களது நாட்டை விட்டு திறமைமிக்க சாதனையாளர்கள் சென்றுவிடக் கூடாது என்பதே இந்த விசாவின் நோக்கம்.
இந்த விசாவை 30,000 திர்ஹாமுக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களும் பெற முடியும். இந்த விசாவை பெறுவதற்கு வயது வரம்பு இல்லை. மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 34 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்