கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, ஈரோடு கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர், கோடம்பாக்கம், கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டிய நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. 43 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகி வந்தது. நேற்று 39 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது 42 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இது போன்ற சூழலில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பூமியின் உஷ்ணம் சற்று தனிந்துள்ளது. மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  


மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


05.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  


06.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  


07.06.2023 முதல் 09.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Wrestlers Protest: "நீதிக்கான போராட்டத்திலிருந்து யாரும் பின்வாங்கவில்லை"..அதிரடி விளக்கம் அளித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்


Arikomban Elephant: அரிக்கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் - தமிழ்நாடு அரசு


TN Schools Reopening: மாணவர்களே... பள்ளிகள் திறப்பு ஜூன் 12-க்கு மீண்டும் தள்ளிவைப்பு; விவரம்