16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது. இதற்கான இலச்சினை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 


”7ஆவது "ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி சென்னை 2023' ஆகஸ்ட் - 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புகழ்பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது.”


”இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் 'ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 20237 போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். ஏப்ரல்-17ஆம் தேதி சென்னை ராடிசன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் -2023 போட்டியினை சென்னையில் நடத்துவது தொடர்பான அறிவிப்பை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வெளியிட்டார். மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள திட்டமிடுவதற்கென ஹாக்கி இந்தியா அதிகாரிகள் குழு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஆய்வு மேற்கொண்டது.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு ஹாக்கி பிரிவு மற்றும் அரசு அதிகாரிகள் குழுவினர் ஒடிசா மாநிலம் ரூர்கேலா மற்றும் கலிங்கா ஆகிய ஹாக்கி மைதானங்களை 2023 ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பார்வையிட்டனர். சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில் உலகின் முதல் பாரிஸ் ஒலிம்பிக் டர்ஃப் அமைத்தல், புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய் 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் பாரிஸ் ஒலிம்பிக் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கைஇழை ஆடுகளம், வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும்


இணைப்பு பணிகள், பார்வையாளர்க தக்கான இருக்கைவசதிகள், சிறப்பு விருந்தனர்கள் அமருவதற்கான பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்கக்கான அறைகள், மின்னொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் பிற சீரமைப்புபணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மைதானத்தை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் 2023 ஏப்ரல் 28-ம் தேதி


முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. "ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் - 2023" போட்டியினை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையில் 06.07.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 'ஆசியன் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023" போட்டியினை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் நிதி உதவியாக ரூபாய் 12 கோடிக்கான காசோலையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் 06.07.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஹாக்கி இந்தியா நிர்வாகிகளிடம் வழங்கினார்.”


பொம்மன் இலச்சினை


இந்த போட்டிகளில் பங்கேற்க வருகின்ற சர்வதேச ஹாக்கி வீரர்கள் தங்கும் நட்சத்திர விடுதிகள், உணவு, போக்குவரத்துவசதிகள், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (20.07.2023) நடைபெற்ற ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023 கோப்பை அறிமுகம், "பொம்மன்" இலச்சினை (BOMMAN MASCOT) வெளியிட்டு விழா நடைபெற்றது. மேலும், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற வகையில் "பாஸ் தி பால்" கோப்பை (PASS THE BALL TROPHY TOUR) சுற்றுப் பயணத்தை தொடங்கி வைக்கப்பட்டது. 


"ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2023" கோப்பை முதலாவதாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது.


* "பாஸ் தி பால் - கோப்பை" சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் வழியாக ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”. என குறிப்பிடப்பட்டுள்ளது.