Vaniarasu: நாம் தமிழர் இயக்கம் இன்று ஓம் தமிழர் இயக்கமாக மாறி உள்ளது - வன்னியரசு பேச்சு

ஆர்எஸ்எஸ் போன்று வெறுப்பு அரசியலை சீமான் கட்டமைக்கிறார். கோட்சே போன்று அவர் வாரிசாக தற்போது ஓம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டமைக்கிறார் என விமர்சனம்.

Continues below advertisement

சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பழனி பாபா 28ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

Continues below advertisement

கூட்டத்தில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, பழனிபாபா சனாதானத்திற்கு எதிராக களமாடியவர். திருமாவளவன் போலவே சனாதனத்திற்கு எதிராக உரையாற்றியவர் பழனிபாபா என்றும், சனாதனத்தை அழிப்பதுதான் பழனிபாபாவின் இலக்காக இருந்தது என்றார். மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ளது.  

பெரியாரை அம்பேத்கரை விமர்சிப்பர்களை நம்ப கூடாது என சொன்னவர் பழனி பாபா? ஆனால், தற்போது பெரியாரை விமர்சிக்கும் ஒருவரிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அவர், பழனி பாபாவின் வாரிசாக திருமாவளவன் செயல்பட்டு வருகிறார். இந்து மதத்தில் ஒடுக்கப்பட்டதால் இந்து மதத்தையே எதிர்த்து போராடுபவர்கள்தான் தலித் மக்கள். வர்ணாஸிரமத்தை எதிர்ப்பதாலேயே இஸ்லாமிர்களை  ஆர்எஸ்எஸ் எதிர்க்கிறது என்றார். பழனிபாபா தற்போது இருந்திருந்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மிகப்பெரிய இணைப்பு சக்தியாக இருந்திருப்பார் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும் போது, நாம் தமிழர் இயக்கம் இன்று ஓம் தமிழர் இயக்கமாக மாறி உள்ளது. அதனால்தான் திராவிட அரசியலை முன்னெடுத்த தந்தை பெரியாரை எதிர்க்கிறார்கள். திராவிட அரசியலை எதிர்ப்பவன் ஆதி திராவிடர் வெறுப்பை எப்படி கட்டமைப்பார். போலி தமிழ்தேசிய வாதி, தமிழ்தேசியத்தின் முதல் எதிரி இந்தியம்தான் என்றார்.

ஒரே நாடு என்பது இந்து ஆஸ்ரமம்; ஒரே மொழி என்பது இந்தி. அரசியல் சூழ்ச்சியால் ஒரே நாடு ஒரே மொழி என இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்கி விட்டு இதர மொழிகளை அழிக்க நினைக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் போன்று வெறுப்பு அரசியலை சீமான் கட்டமைக்கிறார். கோட்சே போன்று அவர் வாரிசாக தற்போது ஓம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டமைக்கிறார் என்றார்.

திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வேங்கைவயல் பிரச்சனைகள் பற்றி வெட்கமே இல்லாமல் பேசுகிறார். மேல்பாதி விவகாரத்தில் நீ என்ன செய்த என ஆவேசமாக பேசிய வன்னியரசு, பிரபாகரன் படத்தை பார்த்தாலே இளைஞர்கள் ஒன்று கூடுகிறார்கள் என்றால் சிங்கள பவுத்த பேரிணம்தான் காரணம் என்றார். அதேபோல் இங்கும் ஒன்று கூட வேண்டும் என்றார். இந்தியாவில் படுகொலைகளை செய்து அரசியல் நடத்துகிறார்கள். சனாதான அரசியலை முன்னெடுக்கவே தமிழ்நாட்டில் பாஜக, நாதக மகிழ்வதாக பேசினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola