சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ பஞ்சராகி நின்றுள்ளது. அதனை சரி செய்வதற்காக ஆட்டோவில் இருந்து மூவரில் இருவர் இறங்கியுள்ளனர். சரக்கு ஆட்டோவின் முன்பகுதியில் இருவர் நின்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பார்சல் லாரி, சரக்கு ஆட்டோவின் பின்னால் மோதிய விபத்தில் மாரிமுத்து மற்றும் காளிதாஸ் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதன்பிறகு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சையில் இருந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.



சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இன்று காலை ஏற்பட்ட மற்றொரு விபத்து ஏற்பட்டுள்ளது. ஆத்தூரில் லீ பஜார் பகுதியில் உயிரிழந்த உறவினரின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சிக்காக வந்தவர்கள் இரவு நேரத்தில் டீ அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலை பக்கம் ஆம்னி வேனில் அனைவரும் வந்துள்ளனர். சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து நள்ளிரவில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஆம்னி பேருந்து, காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 11 வயது சிறுமி தன்சிகா மருத்துவமனையில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஐந்து பேருக்கும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


உயிரிழந்தவர்களின் பெயர் விபரம்.


1. சரண்யா (வயது 23 )


கணவர் பெயர் சுதாகர். முல்லைவாடி ஆத்தூர் .


2. சுகன்யா (வயது 27)


கணவர் பெயர் சந்தோஷ் 


புதிய கல்லா நத்தம் ரோடு முல்லைவாடி ,ஆத்தூர்,


3. சந்தியா (வயது 23 ) 


தகப்பனார் பெயர் மயில் வாகனம்.


4. ரம்யா (வயது 25)


த.பெ .ஆனந்தன் ,


குமாரமங்கலம் போக்கம்பாளையம் திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்.


5. ராஜேஷ் (வயது29)


 தகப்பனார் பெயர் ஆனந்தன் குமாரபாளையம் போக்கம்பாளையம் திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம் .


6. தன்ஷிகா (வயது 11)


தகப்பனார் பெயர் சந்தோஷ் முல்லைவாடி, ஆத்தூர்.


 


இவர்களைத் தவிர மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பெயர் விவரம்.


1. பெரியண்ணன் (வயது 38) தகப்பனார் பெயர் பெரியசாமி


2. புவனேஸ்வரி (வயது 17) தகப்பனார் பெயர் ஹரி மூர்த்தி


3. கிருஷ்ணவேணி (வயது 45) கணவர் பெயர் செல்வராஜ்


4. உதயகுமார் (வயது 17) தகப்பனார் பெயர் சிவக்குமார்


5. சுதா (வயது 35 ) கணவர் பெயர் மயில்சாமி



மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமி தன்ஷிகா உடல் உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து மேலும் 5 பேருக்கு தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த விபத்து குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் இருவர் உயிரிழந்துள்ளதால் ஆத்தூரில் இன்று விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.