தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கரவிழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகிற 19 ஆம் தேதி ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில் அவரது வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 




''பின் சீட்ல நீங்க தொழுகை பண்ணுங்க.. நான் வெய்ட் பண்றேன்..'' மும்பையில் நெகிழ்ச்சி சம்பவம்!


இந்த சூழலில் இது தொடர்பாக, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியதாவது,  இந்து மதக் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநரின் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்துள்ளது கண்டனத்துக்குரியது. தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரான போராட்டத்தை இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறோம். 




ரேஷன் கடைகளில் வங்கிச் சேவை: புதிய திட்டத்தை பரிசீலனை செய்கிறது கேரள அரசு!


ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிக்கணக்னோர் திரண்டு ஆளுநரை வரவேற்போம். தருமபுரம் ஆதீனத்திற்கு பல ஆளுநர்கள் வந்து சென்றபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல், தற்போது நீட் தேர்வுக்கான மசோதாவை கிடப்பில் போட்டதற்கும், இந்தி, சமஸ்கிருத திணிப்பை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீட் தேர்வு காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வால் ஏழை, எளிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதில் பாரதிய ஜனதா கட்சிற்கு மாற்று கருத்து கிடையாது.




KGF Chapter 3: தொடங்குகிறது கேஜிஎஃப் 3.. வெளியான புதிய அப்டேட் - உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்!


தமிழக மாணவர்களை இந்தி படிக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் தமிழக பாரதிய ஜனதா கட்சியை அதனை எதிர்த்து போராடும் என்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை வருகைக்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்களை கொண்டு வந்து வரவேற்போம் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறி இருப்பது மயிலாடுதுறை மாவட்டத்தில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அம்மாவின் பாவாடைதான் ட்ரெஸ்.. நியூயார்க் சாலையில் ஆட்டம் போட்ட இந்திய இளைஞர்! காரணம் இதுதான்!!