கேஜிஎஃப் மூன்றாம் பாகத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தகவல் கூறியுள்ளார்.


யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள  ‘கேஜிஎஃப் 2’ பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் வெகுஜனங்களைக் கவர்ந்துள்ளது. மேலும் ராக்கி பாய் என்ற கோபமான இளைஞன் அவதாரத்தில் யஷை ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த படத்தின் மூலம் ஒரு இந்திய நட்சத்திரமாக யஷின் புகழ் அதிகரித்துள்ளது. இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டு படங்களிலும் பணிபுரிந்ததற்காக பாராட்டப்பட்டார்.  படத்தின் வெற்றியை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் படத்தின் மூன்றாம் பாகத்தை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் மூன்றாம் பாகம் வருவதாக கூறப்பட்டுள்ளது.


தற்போது அதனை படத்தின் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா கன்னட செய்தி சேனலுடன் பேசும்போது இதை உறுதிப்படுத்தினார். கேஜிஎஃப் 3  படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளை குழு தொடங்கியுள்ளது என்றும், விரைவில் கூடுதல் விவரங்கள் வரும் என்றும் அவர் கூறினார். கார்த்திக்கின் இந்த ஸ்டேட்மென்ட் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு உள்ளது. 


முன்னதாக கடந்த மாதம் கேஜிஎஃப் 2  இன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குனர் பிரசாந்த் நீல், கேஜிஎஃப் அடுத்த பாகத்தை தயாரிக்க இன்னும் 8 ஆண்டுகள் ஆகும் என்று ஒரு நிருபர் கேட்டபோது கிண்டலாக பதில் அளித்தார்.


மிரட்டிய கே.ஜி.எஃப்


 கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது


இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு செய்த நிலையில், வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.  இந்தப்படம் 500 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக பட நிறுவனம் தெரிவித்தது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண