தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, அரபு நாடுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேசமயம் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் தமிழர்கள் பலரும் அங்கு கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக பல ஆண்டுகளாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளது.


தமிழர்கள் மீட்பு:


இந்த  நிலையில், குவைத்தில் வேலைக்குச் சென்று சிக்கித் தவித்த 20 தமிழர்களை மீட்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து, குவைத்தில் சிக்கித் தவித்த 20 தமிழர்களையும் தமிழ்நாடு அரசு பத்திரமாக தாயகத்திற்கு மீண்டும் அழைத்து வந்துள்ளது.






தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, குவைத்தில் தவித்த 20 தமிழ் இளைஞர்கள் மீட்பு: தமிழக அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது! குவைத்தில் வேலைக்கு சென்று ஏமாற்றப்பட்டு, தாயகம் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்களை தமிழக அரசு மீட்டு தாயகத்திற்கு அழைத்து வந்துள்ளது.


நடவடிக்கை தேவை:


தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. குவைத்தில் தமிழக இளைஞர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து விளக்கி, அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 24-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசு அவர்களை மீட்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மீட்கப்பட்டு வந்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க: Chennai Bangalore Expressway: சென்னை - பெங்களூருவுக்கு இனி 2 மணிநேரம்தான்.. ஜனவரியில் வரப்போகுது அதிவிரைவுச் சாலை..!


மேலும் படிக்க: பயிற்சிக்கு சென்ற மாணவன்.. உயிரை பறித்த ஈட்டி.. பள்ளி மைதானத்தில் நடந்தது என்ன?