TN Corona LIVE Updates : எதிர்வரும் நாட்களில் 700 முதல் 800 டன் ஆக்சிஜன் தேவைப்படும் - தமிழக அரசு
TN Corona Cases LIVE Updates: தற்போது 72 லட்சத்துக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது
ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் டி ஆர் டி ஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமானால் எதிர்வரும் நாட்களில் 700 முதல் 800 டன் வரையில் ஆக்சிஜன் தேவைப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் உச்சக்கட்ட பாதிப்பை எதிர்நோக்கி கொண்டிருக்கும் வேளையில், சென்ட்ரல் விஸ்டா பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்த மனு மீதான விசாரணை மே 17 அன்று எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வாரம், சென்ட்ரல் விஸ்டா பணிகளுக்கு தடை கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், அவசர விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்தது.
சென்ட்ரல் விஸ்டா திட்டம்:
20,000 கோடி மதிப்பில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்றும் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய வழித்தடப் பகுதி (Central Vista Avenue) மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. நாட்டின் 75-வது சுதந்திர தினம் 2022-ஆம் ஆண்டு கொண்டாட உள்ள நிலையில், புதிய இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் விதத்தில் புதிய கட்டிடம் அமைய உள்ளதாக பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.
ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை நாளொன்றுக்கு 20 ஆயிரம் அளவிற்கு உயர்த்தித் தருமாறு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முதல்வர் முக ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், " தமிழ்நாட்டில் தற்போது 1 இலட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தைத் தேவையான அளவிற்குக் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், ஆறு பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகின்றது.
அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு இதுவரை 2 இலட்சத்து 5 ஆயிரம் குப்பிகள், அதாவது நாளொன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பதால், இந்த ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தித் தர வேண்டுமென மத்திய இரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
நாளொன்றுக்கு தமிழகத்திற்குக் குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியுமென்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். மத்திய அமைச்சரும், இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்." என்று தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு 268-க்கும் மேற்பட்ட டேங்கர்களில், 4200 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை இந்திய ரயில்வே விநியோகித்துள்ளதாக மத்திய அரசு தெரிவிதுள்ளது.
கரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் அறிவித்த கோவிட் நிவாரண உதவியாக முதல் கட்டமாக ரூ.2000 நியாயவிலை கடைகள் மூலமாக வழங்குவதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ வழங்கினார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 1.5 லட்சம் டோஸ்கள் இந்தியா வந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
பின்குறிப்பு:
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ஸ்புட்நிக்-வி தடுப்பூசியை அவசரகால சூழ்நிலையில் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த இந்திய தேசிய ஒழுங்குமுறை அமைப்பாளர் அனுமதியளித்தார்.
டாக்டர். ரெட்டி லெபாரட்டரீஸ் நிறுவனம் (டிஆர்எல்) ரஷ்யாவின் கமாலேயா மையம் தயாரித்த ‘ஸ்புட்நிக்-வி’ என அழைக்கப்படும் கேம்-கோவிட்-வேக் ஒருங்கிணைந்த வெக்டர் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்து விற்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.
தி கேம்-கோவிட்-வேக் ஒருங்கிணைந்த வெக்டர் தடுப்பூசியை (கூறு 1 மற்றும் கூறு 2) மாஸ்கோவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சகத்தின் தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியலுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த ஊசியை உலகம் முழுவதும் 30 நாடுகள் அனுமதித்துள்ளன.
18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தனி நபர்களுக்கு கோவிட்-19 தொற்றை தடுக்க, இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம். இந்த தடுப்பூசியை 0.5 மி.லி அளவில் 21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ்களாக போட வேண்டும். முதல் நாளில் 1வது கூறு தடுப்பூசியை போட வேண்டும். 21ம் நாளில் 2வது கூறு தடுப்பூசியை போட வேண்டும். இந்த தடுப்பூசிகளை -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த தடுப்பூசிகளின் முதல் கூறு மற்றும் 2ம் கூறு ஆகியவற்றை மாற்றி போட முடியாது.
மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, உத்தர பிரதேசம்,, டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்காக இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணம் செய்வோர் நோய் தடுப்பு விதிகளை பின்பற்றி முக கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் 35 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் நாளை கிடைக்கும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை 70 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வேண்டுமென ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை பெருநகரைப் போலவே மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் (Covid Positivity Rate) விகிதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் 20.3% ஆக உள்ள நிலையில், சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் மொத்த உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் 19.3% ஆக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் என்றால் என்ன?
கோவிட் மாதிரிகளை சோதனை செய்வதில் எத்தனை தொற்றுகள் உறுதி செய்யப்படுகின்றன என்பதை பொறுத்து இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது.
தொற்று எண்ணிக்கை
------------------------------------ * 100
ஒட்டுமொத்த கொரோனா சோதனைகள்
இந்த விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும். எனவே, தமிழகத்தின் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் அதிகரித்திருப்பதன் மூலம் இரண்டு முக்கிய விஷயங்களை புரிந்துகொள்ளலாம். முதலாவதாக, சமூக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இரண்டாவதாக, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அநேக மக்களை இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டங்களில் மட்டும் தான் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி 10 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு போடப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் 10% க்கும் குறைவான மக்கலுக்குஎ முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.
இரண்டாவது டோஸ் பொறுத்தவரை, தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 9.15% பேருக்கு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 1 % க்கும் குறைவானோருக்கு போடப்பட்டுள்ளது.
இரண்டாவது கொரோனா பரவல் காரணமாக, 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி - 8 (மைனஸ்) சதவிதமாக வளர்ச்சியடையும் என்று Centre For Economic Data and Analysis ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக வேளாண்துறையில் மட்டுமே புது வேலைவாய்ப்புகள் வளர்ச்சி அடையும் . சேவைகள், உற்பத்தி, கட்டுமானம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிப்படையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி, இதுவரை நாடு முழுவதும் 2,42,362 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயரத்துக்கும் அதிகமான கொரோனா இறப்புகளை இந்தியா பதிவு செய்தது.
இந்தியாவில் செப்டம்பர் 1ம் தேதிக்குள் 1,496,460 (14 லட்சம்) கொரோனா இறப்புகள் பதிவாகலாம் என IHME ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போதைய அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை தொடருமாயின் இந்த எண்ணிக்கை (424,102 முதல் 569,115) ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
கடந்த வருடம் பெருந்தொற்று நிவாரண உதவி தொகை திருநர் சமூக மக்களுக்கு சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்டது (திருநர் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்) கடந்த ஒரு வருட காலமாக புதியதாக திருநர் அடையாள அட்டை ஏதும் வழங்கபடாமல் நிறுத்தி வைக்கபட்டிருந்தது
இதனால் புதியதாக அடையாள படுத்திகொண்ட மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல் மிகவும் சிரம படுகிறார்கள். அவர்களுக்கும் உதவி தொகைதொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமாறு கோருகிறேன் என முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/ நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க தமிழக அரசு ஆணை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
தடுப்பூசிகள் கையிருப்பு, நோய்த் தொற்று பாதிப்பு, சம அளவிலான தடுப்புமருந்து விநியோகம் ஆகியவ்வற்றை கருத்தில் கொண்டு தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய கொவிட்-19 தடுப்பூசி வியூகத்தை வகுத்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அழைத்தது.
மேலும், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை நியாயமான, நீதியான, சமமான வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது எனவும், உச்சநீதிமன்றம் அதில் தலையிட தேவையில்லை என்றும் தனது பதில்மனுவில் தெரிவித்தது.
முன்னதாக, நாட்டின் கோவிட்-19 மேலாண்மை குறித்து தானாக முன்வந்து வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையை கடுமையாக சாடியது.
சென்னையில் கோவிட் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 சதவிகிதமாக உள்ளது. மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் குனமடைந்தவர்கள் விகிதம் 90%க்கும் அதிகமாக உள்ளது.
முதல் கொரோனா பரவலில் கடுமையான சேதங்களை சந்தித்த தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, இராயபுரம், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்கள் இந்த கொரோனா இரண்டாவது பரவலில் குறைவான தாக்கங்களை பதிவு செய்து வருகின்றன. உதாரணமாக, தேனாம்பேட்டையில் கடந்த முந்தைய 7 நாட்களோ கொரோனா பாதிப்பு விகிதம் 0.7 ஆக உள்ளது. மணலியில் அதே 7 நாட்கள் கொரோன பரவல் பாதிப்பு விகிதம் 15% ஆகவும், திருவொற்றியூர் மண்டலத்தில் 14.9% ஆகவும் அதிகரித்துள்ளது.
Background
72 லட்சத்துக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளதாகவும், அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 46,61,960 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக வழங்கவுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இதுவரை, 17.56 கோடி (17,56,20,810) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு இதுவரை 74,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 3.94% வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து மொத்தம், 67,32,649 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 6,71,301 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திடம் இருப்பு உள்ளன.
பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் நன்கொடையாக இதுவரை மொத்தம் 6738 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 3856 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 16 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள், 4668 வென்டிலேட்டர்கள், சுமார் 3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஆகியவை கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை பெறப்பட்டுள்ளன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -