இங்கிலாந்தில் அதிகரித்து வரும் புலம்பெயர் நபர்களை குறைக்கும் வகையில் வெளிநாட்டு மாணவர்களை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளை மேற்கொள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பரீசிலித்துள்ளார்.


 டவுனிங் ஸ்ட்ரீட் செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி, "குறைந்த தரம்" (low quality degree) கொண்ட பட்டங்களை பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் சார்புடையவர்(dependents) குடியேறுவது தொடர்பாகவும் ரிஷி சுனக் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என கூறியிருந்தனர். UK அரசாங்கத்தின் Office for National Statistics (ONS)புள்ளிவிபரங்கள் மூலம் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் அதிக மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டது . 2021 இல் 173,000 ஆக இருந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 504,000 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 331,000 அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


சர்வதேச மாணவர்கள், குறிப்பாக  இந்திய மாணவர்கள் ஏரளமானோர் படிப்பதற்காக இங்கிலாந்திற்கு வருகை தந்துள்ளனர் என்றும் இந்த ஸ்பைக்கிற்கு இது ஒரு பெரிய பங்களிப்பாக இருக்கிறது என கூறுகின்றனர். ”குடியேற்ற நடைமுறைகளை உறுதிசெய்ய அனைத்து தரப்பு வாதங்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். ஒட்டுமொத்த புலம்பெயர் நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்க பிரதமர் முழுமையாக செயல்பட்டு வருகிறார்” என்று ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.


ஆனால் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு சவாலான பணி. பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் இழந்த பணத்தை ஈடுகட்ட சர்வதேச மாணவர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதும், பிரிட்டிஷ் மாணவர்களிடம் குறைந்த கட்டணத்தை வசூலித்தும் ஈடு  செய்கிறது. மேலும் சில பல்கலைக்கழகங்கள் குறைந்த தரம் வாய்ந்த பட்டங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், திவாலாகிவிடும் அபாயமும் உள்ளது என தரவுகள் கூறுகிறது.


சர்வதேச மாணவர்களை நாட்டின் குடியேற்ற புள்ளிவிவரங்களில் இருந்து நீக்குமாறு இந்திய சமூகம் தலைமையிலான மாணவர்கள் அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. "தற்காலிகமாக இங்கிலாந்தில் இருக்கும் மாணவர்களை புலம்பெயர்ந்தவர்களாகக் கணக்கிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.


சர்வதேச மாணவர்கள், குறிப்பாக இந்தியர்கள் மிகப்பெரிய பங்களிப்பு வகிக்கிறார்கள்.  பிரிட்டிஷ் பொருளாதாரத்தில் GBP 30 பில்லியன் நிகர வருவாயைக் கொண்டு வருகிறார்கள்" என்று தேசிய இந்திய மாணவர்களின் தலைவர் சனம் அரோரா கூறினார்.


 ரிஷி சுனக் அரசாங்கம் இங்கிலாந்தில் புலம் பெயர் நபர்களை குறைப்பதாக உறுதியளித்துள்ளது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன், இந்திய மாணவர்கள் நாட்டில் அதிக காலம் தங்கியிருப்பது குறித்து புகார் அளித்திருந்தார். "இந்தியாவுடன் திறந்தநிலை எல்லைக் குடியேற்றக் கொள்கை சற்று கவலையளிப்பதாகவும், அதிக காலம் தங்கியிருப்பவர்களில் இந்தியர்களே அதிகம்," என கூறினார்.    


Free Bus : அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்.. திட்டத்தின் பயன்கள் என்ன..? வெளியான ஜெயரஞ்சன் அறிக்கை..


Oldest Elephant Died: அமெரிக்காவில் கருணைக் கொலை செய்யப்பட்ட இந்திய யானை..! பின்னணி என்ன..?   


Greta Thunberg: சொந்த நாட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர்...! என்ன காரணம் தெரியுமா..?