அமெரிக்காவின் மிகவும் வயதான ஆண் யானை தலிப் நன்றி தெரிவிக்கும் (thanks giving day) தினத்தன்று உயிர் பிரிந்தது. இதையடுத்து, பலரும் இணையத்தில் தலிப் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


தலிப் - அமெரிக்காவின் பழமையான ஆண் யானை மற்றும் மியாமி உயிரியல் பூங்காவின்  கீ பிஸ்கெய்ன் இருப்பிடத்தின்  ஒரு சின்னமாக நம்பப்படுகிறது. உடல்நலம் மற்றும் எடை குறைந்து பல மாதங்களுக்குப் பிறகு மியாமியில் உயிரிழந்தது. உயிரிழந்த தலிப்பிற்கு 56 வயதாகும். 




இந்தியாவில் பிறந்த இந்த தலிப், 1960களில் யானை குட்டியாக தெற்கு புளோரிடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. 1980ம் ஆண்டு கிராண்டன் பார்க் உயிரியல் பூங்காவிலிருந்து தெற்கு மியாமி-டேடில் உள்ள விரிவாக்கப்பட்ட உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்ட ஒரே பாலூட்டி தலிப் தான்.  10 அடிக்கு மேல் உயரமும், 4 ஆயிரத்து 500 கிலோவிற்கு அதிகமான எடையும் கொண்ட தலிப் மியாமி உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வந்தது. 1990களில் டேட் கவுண்டி ஆண்ட்ரூ சூறாவளியால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, மறுசீரமைப்பு மேற்கொண்ட போது தலிப் மூன்று ஆண்டுகள் மத்திய புளோரிடாவில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு மாற்றப்பட்டது.





1960கள் மற்றும் 70களில் உயிரியல் பூங்காகளில் உள்ள சில மதிப்புமிக்க விலங்குகளை வழங்கிய ரால்ப் ஸ்காட் என்ற வேட்டைக்காரரின் பரிசாக தலிப் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதையடுத்து, கடந்த வாரம் மியாமி உயிரியல் பூங்காவின் ஊழியர்கள் தலிப் தரையில் எழுந்து நிற்க்க முடியாமல் படுத்து கிடப்பதை கண்டனர். பட்டைகள் மற்றும் ஃபோர்க்லிஃப்ட்களின் (forklifters) உதவியுடன் தலிப்பை நிறுத்துவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


வயது முதிர்வு, உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்த தலிப்பை கருணைக் கொலை செய்ய உயிரியல் பூங்கா முடிவு செய்தது. வயதான யானையை கருணைக் கொலை செய்ய முறையான அனுமதியும் பெறப்பட்டது. இதையடுத்து, தலிப்பை கருணை கொலை செய்யும் தினத்தில் விடுமுறையில் இருந்த ஊழியர்கள் பணிக்கு  திரும்பினர், ஏற்கனவே அங்கிருந்த சக ஊழியர்களுடன் சேர்ந்து, தலிப்பிற்கு பிடித்த சில விருந்துகளை வழங்கினர் என தகவல் தொடர்பு இயக்குனர் ரான் மாகில் தெரிவித்தார். "அவர்கள் தலிப்பிற்கு வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் ஜெல்லி சாண்ட்விச்களைக் கொண்டு வந்தனர். தலிப் அவற்றை சாப்பிட்டார், பாகற்காய், தர்பூசணி கொடுத்தார்கள். உடலில் சற்றும் சக்தி இல்லவிட்டாலும் தலிப் அதனை ரசித்து உட்கொண்டார்” என கூறினார்.



பின்னர், மிகவும் வயதான யானையான தலிப் கருணைக் கொலை செய்யப்பட்டது. அவர் இறப்பதற்கு முன், அந்த உயிரியல் பூங்காவில் இருக்கும் ஐந்து யானைகளில் ஒன்றான  தலிப் அமெரிக்காவில் உள்ள மிகப் பழமையான "புல்" யானையாக (bull elephant) நம்பப்படுவதாகக் குறிப்பிட்டார். தலிப்பின் தந்தம் மிகவும் நீலமாக தரையை தொடும் அளவிற்கு வளர்ந்து இருந்தது. அது தரையில் தட்டுப்படாமல் இருக்க அவற்றை ட்ரிம் செய்யும் அளவுக்கு நீலமாக இருந்தது.  


”ஆசியாவை பிறப்பிடமாக கொண்ட  யானையான தலிப்பிடமிருந்து விடைபெறுவதில் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். தனது இனத்திற்கான தூதராக பணியாற்றி மற்றும் நான்கு தசாப்தங்களாக இந்த பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது ”என்று மேயர் டேனியலா லெவின் காவா கூறினார். "இந்த நன்றி செலுத்தும் தினத்தில், அவரது வாழ்நாள் முழுவதும் இரக்கத்துடன் கவனிப்பை வழங்கிய ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார். தலிப்பின் இறப்பு வெறும் இழப்பு மட்டுமல்ல, மியாமி உயிரியல் பூங்காவின் கடைசி பாலூட்டியின் இழப்புமாகும் என தெரிவித்தனர்.  இந்த தகவலை மியாமி உயிரியல் பூங்கா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர், இந்த பதிவை கண்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.