குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. இன்றைய தேர்தல் குறித்த 10 முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.



  1. 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் வாக்களிக்க மாநிலங்களின் தலைமை செயலகத்திலும், நாடாளுமன்றத்திலும் , பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

  2. நாடு முழுவதும் 543 மக்களவை எம்.பி-க்கள், மாநிலங்களவை எம்.பி-க்கள் 233 பேர்,எம்பிக்களும் 4,033 பேர் உட்பட 4,800 பேர் வாக்களிக்க தகுதி பெற்றனர். தமிழ்நாட்டில் 234 எம்.எல்.ஏக்கள் வாக்குகளை செலுத்தினர். இன்று நடைபெற்ற தேர்தலில் 99.18 சதவீதம் வாக்குகள் பதிவானதாக, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  3. நியமன எம்.பி-க்கள் மற்றும் மாநிலங்களின் மேலவை உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. ஆனால் நியமன எம்பி-க்களுக்கு குடியரசுத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிகாரம் உண்டு. நியமன எம்பி-யாக இளையராஜா பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  4. காலை 10 மணி தொடங்கிய வாக்குப்பதிவானது, இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலானது, வாக்குச்சீட்டானது டெல்லிக்கு கொண்டு செல்லப்படும்.

  5. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தலைமை செயலகத்தில் வாக்களித்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கவச உடை அணிந்து வாக்களித்தார்.

  6. வாக்கு எண்ணிக்கையானது வரும் 21 ஆம் தேதியன்று எண்ணப்பட்டு, வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார்.

  7. வெற்றி பெற்றவர் வரும் 25 ஆம் தேதி 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்வார்.

  8. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700 ஆகும். எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒரு எம்.எல்.ஏ-வின் மதிப்பு 208 ஆகவும், தமிழ்நாடு எம்.எல்.ஏ-வின் மதிப்பு 176 ஆகவும், மகாராஷ்டிரா – 175ஆகவும், சிக்கிம் எம்.எல்.ஏ-வின் மதிப்பு 7 ஆகவும் உள்ளது.

  9. தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

  10. எதிர்க்கட்சிகள் கூட்டணியின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ளன. தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முக்கு பாஜக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் 60 சதவீதத்திற்கு மேல் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திரௌபதி முர்முக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.


Also Read: Vice President Candidate: குடியரசு துணை தலைவருக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு


Also Read:Vice President candidate: பாஜக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக ஜகதீப் தங்கர் அறிவிப்பு..


Also Read:Presidential Elections 2022: எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார் யஷ்வந்த் சின்ஹா.


Also Read:BJP Presidential Candidate: பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் திரெளபதி முர்மு..