குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில், மேற்கு வங்க ஆளுநராகவுள்ள ஜெகதீப் தங்கர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பாஜக உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்திற்கு பிறகு ஜெகதீப் தங்கர் போட்டியிடுவதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார். 






குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்:


குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பாக இன்று டெல்லியில், பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் ஜெகதீப் தங்கர் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது


மேற்கு வங்க ஆளுநர்:


1951 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிதானா பகுதியில் பிறந்த ஜெகதீப் தங்கர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய இணை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். 71 வயதாகும் ஜெகதீப் தங்கர், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். ஜெகதீப் தங்கர் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது பெருமையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெகதீப் தங்கர் விவசாயி மகன் என்றும், மக்களின் ஆளுநர் என்றும் ஜெ.பி. நட்டா புகழாரம் சூட்டியுள்ளார்.






 


மம்தாவுடன் மோதல்:


மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இருவரும் அரசு நிர்வாகம் தொடர்பாக மோதி கொண்டனர். இந்நிலையில் தான் குடியரசு துணை தலைவர் வேடபாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.


Annamalai : 'கல்லூரிகளுக்குள் அரசியல் வேண்டாம்’ - பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுரை..!


Annamalai : கடலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்; அரசு பதிலளிக்க வேண்டும் - அண்ணாமலை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண