எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்:


குடியரசு துணை தலைவருக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். இன்று டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், மார்கரெட் ஆல்வா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.




குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பாக இன்று டெல்லியில், சரத் பவார் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஆளுநராக பணியாற்றியவர்:


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா, மத்திய அமைச்சராகவும், கோவா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியவர்.


 மார்கரெட் ஆல்வா vs ஜெகதீப் தங்கர் :


பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தங்கர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் மார்கரெட் ஆல்வா இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  இருவரும் நாளை மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




 


Also Read: Vice President candidate: பாஜக கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக ஜகதீப் தங்கர் அறிவிப்பு..