எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளர்:
எதிர்க்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய இன்று கூட்டம் நடைபெற்ற நிலையில் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யஷ்வந்த சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒருமனதாக தேர்வு:
எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்யவதற்காக டெல்லியில் சரத் பவார் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் யஷ்வந்த சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்பதற்கு, அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இன்று காலை திரிணாமுல் காங்கிரஸ் துணை தலைவர் பதவியிலிருந்து யஷ்வந்த சிங்கா பதவி விலகுவதாக அறிவித்தார். அப்போதே குடியரசுத் தலைவர் வேடபாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
3 பேர் மறுப்பு தெரிவித்தனர்.
கடந்த 15 ஆம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. அப்போது அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்ற வகையில் பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சரத் பவார் மறுத்துவிட்டார். அதையடுத்து தேசியவாத மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் கோபால கிருஷ்ண காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் கசிந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, பரூக் அப்துல்லா-வும் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்பதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இந்நிலையில், நேற்று, காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு தெரிவித்துள்ளது, எதிர்க்கட்சிகளுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பாக ஒருமனதாக யஷ்வந்த் சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வேட்பு மனு தாக்கல்:
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜீன் 29ம் தேதியாகும். இந்நிலையில் வரும் 27ஆம் தேதி யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்