Karnataka : '1 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி' - கர்நாடக அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசுப்பெட்டி..!
கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், பணம், தங்கம், வெள்ளி மற்றும் ஆடைகள் அடங்கிய பெட்டியை பரிசாக வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், தீபாவளியன்று தனது ஹோசப்பேட்டை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பணம், தங்கம், வெள்ளி மற்றும் ஆடைகள் அடங்கிய பெட்டியை பரிசாக வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வழங்கிய பரிசுப் பெட்டியில் ரூ. 1 லட்சம் ரொக்கம், 144 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி, ஒரு பட்டுப் புடவை, ஒரு வேட்டி, ஒரு உலர் பழப் பெட்டி ஆகியவை இருந்ததாக தெரியவந்துள்ளது. ஆனந்த சிங் இரண்டு பெட்டிகளை பரிசாக வழங்கினார், ஒன்று மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் மற்றொன்று கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்குமாகும்.
Just In




அவரது தொகுதியில் 35 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஒரு மாநகராட்சியும், 182 உறுப்பினர்களுடன் 10-கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தலினால் இந்த பரிசுப்பெட்டியை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் இதனை அறிந்த ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பரிசுப் பெட்டிகளை வாங்க மறுத்துவிட்டனர்.
ஆனந்த் சிங்கின் ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர். மேலும் அமைச்சர் அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற பரிசுகளை அனுப்புவது வழக்கம் என கூறுகின்றனர். கர்நாடக சட்டசபைக்கு 224 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 2023 மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிபிடத்தக்கது.