மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீன வளாகத்தில் 25 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி காலத்தில் கூட்டுறவு பண்டகசாலை தொடங்கப்பட்டு ஆதீனத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வந்தது.
கூட்டுறவு பண்டகசாலை:
பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த கூட்டுறவு பண்டகசாலை செயல்படாமல் மூடப்பட்டது. இந்நிலையில், கூட்டுறவு பண்டகசாலை இயங்கி வந்த அதே இடத்தில் மீண்டும் அதனை நடைமுறைபடுத்த தற்போதைய தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முடிவெடுத்தார். அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகளை மேற்கொள்ளபட்டு வந்த நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவு இன்று அதே இடத்தில் மீண்டும் கூட்டுறவு பண்டகசாலை சூப்பர் மார்க்கெட் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த பண்டகசாலை சூப்பர் மார்க்கெட்டில் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊழியர்கள், திருமடத்து பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் தரமானதாகவும், விலை மலிவாகவும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார்.
MP Election: மூன்று மாதத்தில் தேர்தல்.. மத்திய பிரதேசத்தில் சத்தம் இல்லாமல் சம்பவம் செய்த பாஜக
அதனைத் தொடர்ந்து பின்னர் அவர் அருளாசி வழங்கி பேசுகையில், தருமபுரம் ஆதீனம் 25 -வது குருமகா சன்னிதானம் அருளாட்சி காலத்தில் ஆதீனத்தில் கூட்டுறவு பண்டகசாலை தொடங்கப்பட்டது. அது இப்போது அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு பண்டக சாலைக்கு தேர்தல் நடத்த வேண்டும். எனவே கட்சிகாரர்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள். நம்முடையது தனி ராஜ்ஜியம், கூட்டாட்சிக்கு போகக்கூடாது. "சிங்கம் எப்போதும் தனியாகத்தான் இருக்கும், பன்றிகள் தான் கூட்டமாக இருக்கும்." தருமபுரம் ஆதீனம் என்பது தனித்துவம் மிக்கது என்று பேசினார். ஆதீனத்தின் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் உற்சாக மிகுதியால் கரகோஷம் எழுப்பினர்.
Actress Nithya Menon :நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் டும் டும்.. இணையத்தில் வெளியான தகவல் ...
நேற்று முன்தினம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரி பவள விழாற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைத்து, இந்த ஆட்சி ஆன்மீக ஆட்சியர் என புகழாரம் சூட்டி பேசிய நிலையில் இன்று அரசியல் குறித்து பேசியது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.