நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. நித்யா மேனன் 1998-ஆம் ஆண்டு வெளியான ஹனுமான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர். மலையாள படங்களில் நடித்து வந்த இவர், நூற்றெண்பது, வெப்பம், உள்ளிட்ட படங்களின் மூலமாக கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். நித்யா மேனன் ஒரு பின்னனி பாடகியும் ஆவார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி, மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படங்களுக்கு பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
நித்யா மேனான், ராகவா லாரன்சுடன் இணைந்து காஞ்சனா திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து ஓ காதல் கண்மணி, மெர்சல் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடித்தப்படம் திருச்சிற்றம்லம் தான். இத்திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தனுஷை விட அந்த படத்தில் ஷோபனாவாக நடித்த நித்யா மேனனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்டத்தில் தனுஷுக்கு கேர்ள் பிரண்டாக வரும் நித்யாமேனனை போல் ஒரு கேர்ள் பிரண்ட் நமக்கும் கிடைச்சா நல்லா இருக்குமே என பல இளைஞர்களை யோசிக்க வைத்த கதாப்பாத்திரம் அது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை நித்யா மேனன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. பொதுவாக நடிகைகள் திருமண வயதை எட்டியவுடன் திருமணம் செய்துகொள்வதில்லை. சில நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால் மார்க்கெட் இருக்காது என்பதற்காக திருமணத்தை தள்ளிப்போடுவது உண்டு. ஆனால் ஒரு சில நடிகைகளோ ஒரு சில படங்களில் நடித்த உடனேயே திருமணம் செய்து கொள்வதுண்டு. இந்நிலையில் நடிகை நித்யா மேனன் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே நித்யா மேனன் தனது,நெருக்கிய நண்பரும், மலையாள நடிகருமான நபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இவர்களது திருமணத்திற்கு இருதரப்பில் இருந்தும் பெற்றோர்கள் க்ரீன் சிக்னல் காட்டி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நித்யாமேனன் இது வரை இது குறித்த அதிகாரப்பூர்வா அறிவிப்பு எதையும் வெளியிடாத நிலையில் விரைவில், அவரின் திருமணம் தொடர்பாக பரவி வரும் இந்த தகவல் உண்மையா இல்லையா என தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க