அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்று திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். வழக்கமாகத் திரைப்பட விழா மேடைகளில் வரும் கிருத்திகா உதயநிதி, சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்டதால் எழுந்த இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக கிருத்திகா உதயநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 


சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவக் கல்லூரியில் குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ சேவை முகாம் நடைபெற்றது. இதனைத் திமுகவின் இளைஞரணித் தலைவரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினின் மனைவி, திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியின் போது, கிருத்திகா உதயநிதி குதிரைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துப் பொருள்கள் முதலானவற்றை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கினார். மேலும், குதிரைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த முகாமில் சுமார் 80 குதிரைகளுக்கு நோய் எதிர்ப்புத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 


இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கிருத்திகா உதயநிதியிடம் செய்தியாளர்களைச் சந்தித்தார். `உதயநிதி அறக்கட்டளையின் மூலமாக இந்த முகாம் நடத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பல்வேறு விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து இவ்வாறான மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுபோன்று ஏற்கனவே குதிரைகளுக்கான முகாம் நடத்தியுள்ளோம்’ என்று இந்த நிகழ்ச்சி குறித்து பேசினார். அப்போது அவரிடம் `அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா?’ என்று கேட்ட போது சிரித்த கிருத்திகா உதயநிதி, தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். 


மேலும் படிக்க..


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்