ஹேட் இன் இந்தியாவும்  (Hate-in-India), மேக்-இன் -இந்தியாவும் (Make-in-India) நாட்டில் ஒருசேர இருக்க முடியாது என்றும், இந்தியாவின் அழிவுக்கு வழிவகுக்கும் வேலைவாய்ப்பின்மையை போக்குவதில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது என்றும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பிரதமர் நரேந்திர மோடியை சாடியுள்ளார்.


இந்தியாவை விட்டு வெளியேறிய தொழில் நிறுவனங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ராகுல் காந்தி சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் இந்தியாவில் நிகழ்ந்துவரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், மோடியின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், தனது பதிவில், டாட்சன், ஃபியட், ஹார்ட்லி டேவிட்சன், யுனைட்டட் மோட்டார்ஸ், ஃபோர்டு,சேவோர்லேட், மேன் ட்ரக்ஸ் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியது குறித்த தரவுகளை பகிர்ந்திருந்தார்.






ராகுல் காந்தியின் டிவீட்டில்.” இந்தியாவில் இருந்து ஏழு சர்வதேச நிறுவனங்கள் வெளியேறிவிட்டன. இதுவரை,9 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 649 டீலர்ஷிப்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவால் 84,000 பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். பிரதமர் மோடி அவர்களே...ஹேட் இன் இந்தியாவும், மேக் இன் இந்தியாவும் ஒன்றாக இருக்க முடியாது. தற்போதைய சூழலில், வேலையின்மைப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.” என்று குறிப்பிட்டிருந்தார்.


கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து 2022 வரை இந்தியாவைவிட்டு வெளியேறிய நிறுவனங்களின் தரவுகளின் படத்துடன் இக்கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதாவதும், இந்தியாவில் மதம் சார்ந்த வெறுப்பு அரசியல் அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார், ராகுல் காந்தி. நாட்டின் வளர்ச்சிக்கு வெறுப்பு அரசியல் எதிரி என்பதை குறிப்பிடும் வகையில் ராகுலின் ட்வீட் அமைந்திருக்கிறது.


Also Read | Kaathu Vaakula Rendu Kadhal Review: ‛ஒரு முட்டையில் 2 ஆம்லெட்’ போட்ட காத்து வாக்குல ரெண்டு காதல்... என்ன மாதிரியான படம்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண