அண்ணாமலை அறிக்கை:


கடலூர் மாணவி ஸ்ரீமதி தற்கொலை விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் எனவும், திமுக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.



Annamalai : கடலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்; அரசு பதிலளிக்க வேண்டும் - அண்ணாமலை


மாணவி இறப்பில் மர்மம்:


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி , மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.


நீதி கிடைக்க வேண்டும்:


மாணவி விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கவலை அளிப்பதாக உள்ளது. இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும், நீதிக்காக போராடும் மாணவியின் பெற்றோருக்கு, அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 






Also read: India Vaccine Milestone : இத்தனை கோடி தடுப்பூசிகளா? தடுப்பூசி செலுத்தியதில் சாதனை மைல்கல்லை தொட்ட இந்தியா..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண