தேசியத்தை  கொச்சைபடுத்த  பிரிவினைவாத சூழ்நிலை உருவாவதற்கு திமுக  அரசு உடந்தையாக உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.


எச்.ராஜா மீது பாஜக காரைக்குடி நகர நிர்வாகிகள் தெரிவித்த  குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று பாஜக மாநில அமைப்பு செயலாளர் சேசவவிநாயகம் குற்றச்சாட்டுகள்  குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் தனிதனியாக விசாரனை நடத்தினார். இந்த விசாரணையில் ஹெச்.ராஜாவும் கலந்து கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா தேசியத்தை பற்றி கேள்வி எழுப்ப வேண்டும், கொச்சைபடுத்த வேண்டும், பிரிவினைவாதத்தை வளர்க்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாவதற்கு திமுக அரசு உடந்தையாக உள்ளது இது  வன்மையாக கண்டிக்கதக்கது என்று கூறினார்.


தேர்தல் பணத்தில் வீடு கட்டும் பணி: எச்.ராஜா மீதான புகாரை விசாரிக்க பாஜக தலைமை முடிவு!


மேலும், முதுகுளத்தூரில் இஸ்லாமியர் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அது பற்றி கனிமொழி ஏன் ட்விட் செய்யவில்லை. ஏன் அந்த பள்ளி கூடத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம் என்று அன்பில் பொய்யாமொழி கூறவில்லை. இது திட்டமிட்டவகையில் இந்துகல்வி நிறுவங்களை முடக்குகிற வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினர். நிர்வாகிகள் குற்றச்சாட்டு சர்ச்சை குறித்து கேட்தற்கு கட்சிக்குள் சர்ச்சைகள் எதுவும் இல்லை என்று கூறினார்.




நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியிடம் தோல்வியை தழுவியிருந்தார். தனது தேர்தல் தோல்விக்கு சிவகங்கை மாவட்ட மற்றும் காரைக்குடி நகர பாஜக நிர்வாகிகள் முறையாக கட்சிப்பணி ஆற்றாததே காரணம் என கட்சி மேலிடத்திற்கு எச்.ராஜா புகார் அளித்திருந்த நிலையில், அதனை முற்றிலும் மறுத்திருந்த பாஜக மாவட்ட நிர்வாகிகள், கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் எச்.ராஜாவிற்கு காரைக்குடி நகரப்பகுதியில் 8000 வாக்குகளை அதிமாக பெற்றுத் தந்ததாக காரைக்குடி நகர செயலாளர் சந்திரன் கூறியிருந்தார்.


தான் இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று முன்கூட்டியே எச்.ராஜாவிற்கு தெரிந்ததால் கட்சி மேலிடம் தேர்தல் செலவிற்காக கொடுத்த எல்லா நிதியையும் அவரே வைத்துக் கொண்டதாக குற்றம்சாட்டியதுடன் தற்போது காரைக்குடியிலேயே எச்.ராஜா 4 கோடியில் வீடு கட்டி வருவதாகவும் பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். எச்.ராஜாவின் மருமகன் சூரிய நாராயணன் தரப்பில் இருந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் ராஜினாமா செய்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.


இந்த நிலையில் நேற்று நடந்த பாஜக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நேரடியாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கே சென்று எச்.ராஜா மீது புகார் அளித்துள்ள பாஜக மாவட்ட மற்று நகர நிர்வாகிகளை சந்தித்து விசாரணை நடத்தினார். எச்.ராஜா மீது குற்றச்சாட்டு கூறி நிர்வாகிகள் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


‛பிரிவினை போக்கில் செயல்படும் திமுக அரசு’ -பாஜக செயற்குழுவில் கண்டன தீர்மானம்!