தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. பாஜக தலைவர் முருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொறுப்பாளர் சிடி ரவி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்றார். கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
’’தீர்மானம் - 1
நமது பாரதப்பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திரமோடி அவர்களுக்கு பாராட்டு 2019ம் வருடம் முதல் இன்று வரை உலகையே அச்சுறுத்தி, பெரும் துயரங்களை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா என்ற பெருந்தொற்று இன்று வரை நீடித்து கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகள் செய்யாததை, நமது பாரதப்பிரதமர் அவர்கள் செய்து காட்டியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. சரியான நேரத்தில் தேசிய ஊரடங்கை கொண்டு வந்து, மக்களுக்கு உரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது,கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தை தேசிய அளவில் மக்கள் ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் விதமாக மக்களை தயார்படுத்தி மக்கள் இயக்கமாக மாற்றியது, எந்த நாடுமே செய்யாத முயற்சியாக ஒரு தடுப்பூசி அல்ல, இரண்டு தடுப்பூசிகளை நாட்டில் உருவாக்கி, ஜனவரி 16, 2021 முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது நிகழ்த்தியுள்ளர் நமது பிரதமர் அவர்கள். என பல்வேறு சாதனைகளை இந்திய மக்கள் தொகையை கணக்கில் வைத்து கோவிஷீல்டு கோவேக்சின் மட்டுமல்லாமல் கோர்பிவாக்ஸ் என்ற தடுப்பூசியையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததோடல்லாமல், வெளிநாடுகளிலிருந்து ஸ்புட்னிக் மற்றும் V ஃபைஸர் தயாரிப்புகளான தடுப்பூசிகளை பெரும் அளவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சரியான திட்டமிடல்களை செய்துள்ளார்.
கொரோனா தொற்று இறப்பு என்று கணக்கிடும் போது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, நம்நாடு பல மடங்கு நல்ல நிலையில் இருக்கிறது தடுப்பூசி போடுவதில் இந்தியா முதலிடம். நடப்பு ஆண்டு முடிவுக்குள் 200 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் பிரம்மாண்டமான திட்டத்தை உருவாக்கி செயல்முறைக்கு கொண்டு வந்திருப்பது
புனே - சிரம் இன்ஸ்டியூட் மூலம் 95 கோடி டோஸ்கள்
பாரத் பயோ டெக்மூலம் 65 கோடி டோஸ்கள்
பயோஈ மூலம் 30 கோடி டோஸ்கள்
ரெட்டிஸ் லேபரட்டரி மூலம் 15.6 கோடி டோஸ்கள்
மற்றவர்கள் மூலமாக 11 கோடி டோஸ்கள்
மக்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டு அனைத்து இந்திய மக்களுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை தயாரிக்க தேவையான கச்சாப் பொருட்களின் மீதிருந்த ஆக மொத்தம் 216.6 கோடி அமெரிக்க அரசின் தடையை, பேச்சு வார்த்தையின் மூலம் நீக்கச் 18 வயது முடிந்த அனைவருக்கும் இலவச தடுப்பூசி செய்தது. தடுப்பூசியின் மொத்த உற்பத்தியில் 75 சதவிகித தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு ஜூன் 21 முதல் இலவசமாக அளிக்கும் திட்டத்தை முறைப்படுத்தியது.
மீதமுள்ள 25 சதவிகித தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள், அடக்க விலைக்கு மேல் ரூபாய் 150 மட்டும் வசூலிக்கும் முறையை ஏற்படுத்தியது. தீபாவளி வரை நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்கு இலவச ரேசன் பொருட்களை வழங்க உத்தரவிட்டது.
கொரோனாவிற்கு எதிரான போரில் உரிய நேரத்தில் இந்திய விமானப்படை, இந்திய கடற்படை மற்றும் இந்திய ரயில்வே ஆகியவற்றை மாநிலங்கள் முழுவதும் தடுப்பூசி தயாரிப்பு மூலப்பொருட்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்றவற்றை சிறந்த
முறையில் வினியோகம் செய்தது. கொரோனா தடுப்பூசிக்கு, அறிவுசார் சொத்துரிமையில் இருந்து விலக்கு அளிக்க வலியிறுத்துமாறு உலக வர்த்தக மையத்தை கோர வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தியது.
* PM கேர்ஸ் நிதி மூலம் 380 PSA ஆக்ஸிஜன் நிலையங்கள் நாடு முழுவதும் நிறுவ உத்தரவிட்டது.
முதல் கொரோனா அலையின் போது 183 நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டிய நமது பாரதப்பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் நற்செயலின் மூலமாக, இரண்டாவது அலையின் போது பெருவாரியான உலக நாடுகளை நம் தேசத்திற்கு உதவி செய்ய வைத்துள்ளது. கொரோனாவிற்கு எதிரான போரை மக்கள் இயக்கமாக மாற்றியது 224 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமாக 26,281 மெட்ரிக் டன்
ஆக்ஸிஜனை நாடு முழுவதும் கொண்டு சென்று மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் வழங்கியது
இதில் தமிழகத்திற்கு மட்டும் 60 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மூலமாக 4326.55 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஜூன் 10 வரை வழங்கியது. கொடிய கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்துவதற்கு கூடுதலாக 23.680 குப்பிகள் ஆம்போ டெரிசின் பி மருந்து ஒதுக்கீடு செய்து கூடுதலாக 5 நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்திட அனுமதி வழங்கி இருப்பது என பல்வேறு வேலைகள் மக்கள் நலனுக்காக செய்யப்பட்டுள்ளது. 22.06.2021 ம் தேதி வரை 29,46,39,511 தடுப்பூசி டோஸ்கள் இந்திய மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1.14 கோடி
மக்கள் தடுப்பூசி போடப்பட்டு பயன்பெற்று உள்ளனர். மத்திய அரசாங்கத்தின் DRDO (Defense Research Development Organization) மூலமாக உள் நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகின்ற கொரோனா எதிர்ப்பு மருந்தாகிய 2DG மற்றும் குறைந்த விலையில் கொரோனா Antibody Detection Kit உருவாக்கியது
இவை அனைத்திற்கும் மேலாக, அனைத்து எதிர்கட்சிகளும், ஊடகங்களும், எதிர்கட்சி தலைவர்களும், பார்த பிரதமரை அவதூறு அவமானப்படுத்திய நேரத்தில் கூட, பிரச்சாரம் மூலம் யாரையும் குறை கூறாமல் இருக்கும் பாரதப்பிரதமர் மோடிஜி அவர்களை பெருமிதம் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் மூலம் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் - 2
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும்,பணி செய்த மாநில, மாவட்ட, மண்டல், கிளை கமிட்டி நிர்வாகிகள், முக்கியத் தலைவர்கள் அனைவருக்கும் பாராட்டு.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை தெற்கு, மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1996 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வென்று முதல் முறையாக தமிழக சட்டமன்றத்தில் பாஜக நுழைந்தது, அதன்பிறகு 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் பாஜக வென்றது 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போது 4 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஓரிடத்தில் கூட பாஜக வென்றுவிடக் கூடாது என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தன. பாஜகவை தோற்கடிக்க ஆள் பலம், பணபலத்தை ஏவினர் மக்களிடம் பிரிவினையைத் தூண்டும் வகையில் பாஜகவுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ஆனால், அனைத்து சதிகளையும், தடைகளையும் மீறி தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. 4 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் Dr.L.முருகன் அவர்கள் தலைமையில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டோம். இந்த வெற்றிக்கு வழிவகுத்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா மற்றும் பல மத்திய அமைச்சர்கள், தமிழக பார்வையாளரும் தேசிய பொதுச்செயலாளருமான திரு.C.T.ரவி, துணை பார்வையாளர் திரு.Dr.P.சுதாகர் ரெட்டி, தேர்தல் பொறுப்பாளரும் மத்திய இணையமைச்சருமான திரு.கிஷன் ரெட்டி துணை பொறுப்பாளர் திரு.வி.கே.சிங், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், பாஜக மாநில, மாவட்ட, மண்டல, கிளை கமிட்டி நிர்வாகிகள், முக்கியத் தலைவர்கள் அனைவருக்கும் மாநில செயற்குழு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறது
பாஜகவின் வெற்றிக்கு இரவு பகல் பாராது, கண் துஞ்சாது உழைத்த லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களுக்கும், திமுக கூட்டணி கட்சியினரின் பிரிவினைவாத சக்திகளையும், மேற்கொண்ட பொய் பிரச்சாரங்களை எல்லாம் மீறி பாஜக-வுக்கு ஆதரவளித்த தமிழக மக்களுக்கும், தேசிய சிந்தனை கொண்ட நமது கட்சி ஆதரவாளர்களுக்கும், இந்த மாநில செயற்குழு நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி, பாமக தலைவர் டாக்டர் திரு.ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் திரு.அன்புமணி ராமதாஸ், த.மா.க. தலைவர் திரு. ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் பாஜக மாநில செயற்குழு இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
கடந்த 7 ஆண்டு பாஜக ஆட்சியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டில் இந்தியாவை படைக்கவும், தீவிரவாதம், மதவாதம், சாதியவாதம் இல்லாத புதிய இந்தியாவை 2022ஆம் ஆண்டுக்குள் படைக்கவும், வீடுகள் இல்லாதவர்களே இந்தியாவில் இல்லை என்ற நிலையை உருவாக்கவும் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கடுமையாக பாடுபட்டு வருகிறார். ஆனால், பாரத நாட்டிலும் உலக அரங்கிலும் மிகப் பிரபலமாக விளங்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடியை வீழ்த்த வேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்தோடு செயல்படுவதே எதிர்க்கட்சி கூட்டணியின் நோக்கம் அவர்களிடம் சரியான தலைவரோ, சரியான கொள்கையோ இல்லை.
ஆனாலும் பொய் பிரச்சாரத்தை செய்து. மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தேர்தல் மூலம் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது திமுக.
தேர்தலுக்கு பின்னரும் கூட திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து மத்திய பாஜக அரசின் மீதும், மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும், வீண்பழி சுமத்தும் வகையில் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளைக் கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதனை முறியடிக்க வேண்டிய மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் பாஜக சார்பில் சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ள 4 எம்.எல்.ஏ.க்களுக்கும் உள்ளது அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த மாநில செயற்குழு
தீர்மானம் - 3
ஒன்றிய அரசு என்ற பிரிவினைவாத பேச்சுக்கு கண்டனம் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின். தி.மு.கவினர் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு' என்கிற சொல்லை பயன்படுத்தி வருகிற நிலையில், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாநிலங்களால் ஆனது தான் இந்தியா என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியா யூனியன் வரையறுக்கப்பட்டிருக்கிறது ஸ்டேட்ஸ் (Union of States) என்றே என்றும், அரசியலமைப்பு சட்டபடி பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வர் கூறியிருப்பது வியப்பளிக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்தில் 'India that is Bharath shall be Union of States' என்றே சொல்லப்பட்டுள்ளது (Not should be). அதாவது இந்தியா பல மாநிலங்களை கொண்டதாக இருக்கலாம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தியா தனது நிர்வாக வசதிக்காக தன்னை மாநிலங்களாக பிரித்து அரசாளும் என்பதே பொருள் ஆகையால் 'இந்தியாவால் ஆனது தான் மாநிலங்கள் என்பதையும், மேலும் இதில் நிலைத்து நிற்பது இந்தியா தான் என்பதையும், மற்ற அனைத்துமே மாறக்கூடியவை என்பதையும் முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒன்றியம் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதன் மூலம் மத்திய அரசை சிறுமைப்படுத்துவதாக எண்ணி புளாங்கிதம் அடைந்து கொண்டு, ஏதோதோ விளக்கங்களை கூறி கொண்டிருப்பது, கொரோனாவை சமாளிக்க முடியாத தமிழக அரசு நிர்வாக ரீதியாக திணறுவதை மறைக்கும் முயற்சியாகவே மக்கள் பார்க்கிறார்கள் ஒன்றியம் என்ற சொல்லில் குற்றம் இல்லை என்றாலும், இதை சொல்வதில் பெரும் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறது பாஜக
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெற்றிபெற்ற மறுநிமிடமே, 'belongs to Dravidian Stock' என்று பதிவிட்டு பெருமை கொண்டதை தொடர்ந்தே இந்த சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1962 ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை அவர்கள் நான் திராவிட இனத்தை சார்ந்தவன்' I belong to Dravidian stock) என்று சுயநிர்ணயம் குறித்து பேசிய போது, பாஜகவின் நிறுவனத்தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், 'சுயநிர்ணயம்' என்ற பெயரில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவித்து இந்தியாவை துண்டாட துடிக்கும் சக்திகளை அனுமதிக்க முடியாது என்றும், இது போன்ற தேச விரோத குரல்களை ஒடுக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று முழங்கியதை இந்த செயற்குழு நினைவுகூர்கிறது. அன்று திரு.வாஜ்பாய் அவர்களின் நிலைப்பாட்டில் தான் இன்றைய பாஜகவும் உறுதியாக நிற்கிறது என்பதை தி.மு.கவினர் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டிற்கு கேடுவிளைவிக்கும் எந்த செயலையும் பாஜக அனுமதிக்காது என்றும், வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்பதையும் இந்த செயற்குழு உறுதி கூறுகிறது.
ஆகவே, தமிழகத்தில் தற்போது உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட ஆக்கபூர்வ நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டிய தி.மு.க அரசு, மொழி அரசியல், இன அரசியல் போன்றவைகளை முன்னிறுத்தி, பிரிவினைவாத போக்கை பரப்ப நினைக்கிறது. இதற்காக இந்த செயற்குழு திமுகவையும், திமுக அரசையும் வன்மையாக கண்டிக்கிறது. தீர்மானம் - 4
மாணவர்களுக்கு அதிக பலனளிக்கும் நீட்தேர்வு குறித்து மக்களை ஏமாற்றும் திராவிட கட்சிகளை பாஜக கண்டிக்கிறது. மருத்துவப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான 'நீட்' தேர்வினை 2016 ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு. அந்த வருடம் முதலே நாடு முழுவதும் நடத்த அனுமதி அளித்தது. பின்னர் அது 2017 ஆம் வருடம் முதல் தமிழகத்திலும் நடைமுறையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்வத்துடன் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வருகின்றனர்.
ஆனால் ஆரம்பம் முதலே, தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மற்றும் விசிக உள்ளிட்ட சிறுகட்சிகள், திராவிட மற்றும் பல்வேறு உதிரி அமைப்புகள் நீட் தேர்வினை எதிர்த்து வருகின்றன. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவை ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆதரவு கொடுத்து விட்டு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றன.
அதிமுக அரசு எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டே மாணவர்களுக்கு தேர்வுக்கான பயிற்சியை அளித்து வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வை ரத்து செய்வது என்பது அரசின் முதல் நடவடிக்கையாக இருக்கும் என தேர்தல் அறிக்கையில் கூறியது. மேலும் அதன் தலைவர்களும் அந்த வாக்குறுதியை தொடர்ந்து மக்களிடத்தில் பரப்புரை ஆற்றி வந்தார்கள். பின்னர் ஆட்சிக்கு வந்ததும், ஜூன் 5ஆம் தேதி நீட்தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில், திமுக அரசு ஒரு குழுவினை அமைத்துள்ளது. அந்தக்குழு நீட்டின் தாக்கம் குறித்து மக்களிடத்தில் கருத்துகளைப்பெற்று ஒருமாத காலத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது அதற்காக வெளியிடப்பட்ட அரசுக்குறிப்பில் திமுகவின் முக்கிய நோக்கம் தமிழகத்தில் சமூகநீதியைக்காப்பது என்றும், முந்தைய திமுக ஆட்சி கொண்டு வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவப்படிப்புகளுக்குத் தேர்ந்தெடுப்பது தான் சரியாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? நீட் தேர்வு வந்த பின்னர் தமிழக மாணவர்கள் வருடா வருடம் அதிக எண்ணிக்கையில் பரீட்சையில் பங்கு பெறுவதும், தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகிறது சென்ற 2020 ஆம் வருடம் நடந்த நீட் தேர்வில், தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை சராசரியாக 56.44% ஆகும் தமிழ் நாட்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 57.44%. 2019 ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது ஒரே வருடத்தில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சுமார் 9% அதிகரித்து, தேசிய அளவில் மிக அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள், ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பயன் பெற்றனர். தற்பொழுது திமுகவின் நிலைப்பாட்டால் 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் பயன் பெற்ற ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் அதிக அளவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களே மருத்துவப்படிப்பில் சேர்ந்து வருவது தெரிகிறது. எனவே நீட் தேர்வினை அறிமுகப்படுத்தியதால், சமூகநீதி பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் சொல்லி வருவது முழுவதும் பொய் மட்டுமே.
மேலும் நீட் தேர்வு வந்த பின்னர் வெளிமாநிலங்களில் உள்ள உயர்தர மருத்துவக கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான எய்ம்ஸ் ஜிப்மெர் உள்ளிட்ட கல்லூரிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சென்ற வருடம் முதன் முறையாக முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
முன்னர் 2006ஆம் வருடம், திமுக ஆட்சியின் போது, பன்னிரெண்டாம் வகுப்பின் மதிப்பெண்களை வைத்து மருத்துவசேர்க்கை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது தொடர்ந்து 2016 வரை அந்த முறை நடைமுறையில் இருந்து வந்தது. அதில் மொத்தமாக, அந்தக்காலகட்டம் முழுவதும், மாநிலத்தில் அரசு பள்ளியில் படித்து, மருத்துவ சேர்க்கை கிடைத்த மாணவர்கள் வெறும் 213 பேர் மட்டுமே
அப்போதெல்லாம் பள்ளிகளில், பதினொன்றாம் வகுப்பு பாடங்கள் போதிக்கப்படவே இல்லை. தமிழக அரசின் 'ப்ளூபிரிண்ட் என்னும் முறை மூலம், குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே மாணவர்கள் மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டு அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டன. மேலும் மாநிலத்தில் பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாக பதினொன்று- பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றப்படவேயில்லை.
2017 ஆம் வருடத்தில், தமிழக அரசு பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றியமைத்தது, பதினொன்றாம் வகுப்பு பாடங்களை வகுப்புகளில் போதிக்கத் துவங்கியது, மருத்துவப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அரசே பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் தமிழக மாணவர்கள் இயற்கையாகவே அதிக அளவில் ஆரம்பித்துவிட்டனர். வெற்றி பெற
எனவே மருத்துவப்படிப்பு சம்பந்தமாக முந்தைய வருடங்களில் மாணவர்களுக்கு ஏற்பட்டு வந்த சிரமங்களுக்கெல்லாம் முழுக்காரணம் தமிழக கல்வித்துறையின் மோசமான செயல்பாடுகள் மட்டுமே. தமிழக மாணவர்கள் மிகத்திறமை வாய்ந்தவர்கள். முறையான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் போது, அவர்கள் சாதித்துக்காட்டுவார்கள் என்பதை அவர்கள் தற்போது அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தி வருகிறார்கள்,
மோடி அரசு கடந்த இரண்டு வருட காலத்தில் தமிழகத்துக்கு மட்டும் பதினோரு மருத்துவக் கல்லூரிகளையும் ஒரு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியையும் கொடுத்துள்ளது. இது நாட்டின் மற்ற எந்தவொரு மாநிலத்துக்கும் கிடைக்காத பேருதவி. அதன் மூலம் அடுத்து வரும் சில மாதங்களில் சுமார் 1750 மருத்துவ இடங்கள் மேலும் நமக்குக் கிடைக்க உள்ளன. அவை அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் வருடா வருடம் உயர்ந்து கொண்டு செல்லும்
எனவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மூலம் சமூக நீதி அதிகம் கிடைப்பது மட்டுமன்றி வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. நீட் தேர்வை பொறுத்த வரையில் இனி அதை நீக்குவதற்கான வாய்ப்பே இல்லை. திராவிடகட்சிகள் அதை வைத்து சுயநல அரசியல் மட்டுமே செய்து வருகின்றன. நல்வாழ்வுக்கு அடிப்படையான மருத்துவக் கல்வித்துறையில் மாணவர்களை வைத்து அரசியல் செய்யும் திராவிட கட்சிகளை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. தமிழக மாணவர்கள் அவர்களின் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறது.
கோவில் சொத்து ஆண்டவனின் சொத்து. அரசு இதற்கு ஒரு பாதுகாவலன் மட்டுமே இதை விற்பதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ராஜராஜ சோழன் கோவில்களுக்கு எழுதிய பட்டயங்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவை தெளிவாக அரசுக்கு ஹிந்து ஆலயத்தில் தினந்தோறும் நடக்கும் வழிபாட்டு முறைகள். ஆகமத்தில் தலையீடு, கோயில் புராதனத்தை அழித்து புனர்நிர்மாணம் செய்தல், கோயில் சொத்துக்களை விற்பது, அர்ச்சகர்கள் நியமிப்பது, செயல் அலுவலர்கள் நியமிப்பது போன்றவற்றிற்கு அதிகாரமோ உரிமையோ இல்லை
அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ள கோயில்களுக்கு உடனடியாக அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த நியமனம் நீதிமன்ற வழிகாட்டுதல்படி இருக்க வேண்டும்
அரசியல்வாதிகள் அறங்காவலர்களாக நியமிக்கப்படக் கூடாது. நீதிமன்ற உத்தரவுப்படி, கோயில் வரவு செலவுகள் CAG தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, தவறுகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கோயில் சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக நிர்வகிக்கப்பட்டு நிலுவைத் தொகைகளும் வசூலிக்கப்பட வேண்டும் கோயில் நிலங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் சம்பந்தப்பட்ட கோயிலின் செலவீனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் தரிசன டிக்கெட்டுகள் ஒழிக்கப்பட வேண்டும். கோயில் கோசாலைகள், யானைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு பேணிக்காக்கப்பட வேண்டும். இந்து துறைக்கென தனி விஜிலென்ஸ் அமைக்கப்பட வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் மீதான பாலியல் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சமீபகாலமாக ஹிந்து நிர்வாகப்பள்ளிகள், கல்லூரிகள் குறிப்பிட்டு தாக்கப்படுவதோடு. இந்து விரோத அரசியல் கட்சித் தலைவர்களால் அது தினந்தோறும் ஊடக விவாதப் பொருளாக மாற்றப்படுகிறது.
மாறாக சிறுபான்மையினர் கல்விக்கூடங்கள் அல்லது அரசு உதவிப்பெறும் சிறுபான்மை கல்விக்கூடங்களில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளை, இந்து மதத்தின் மீது துவேஷம் கொண்டாடும் புதிய அரசு மூடிமறைக்க முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தீர்மானம் - 6
தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றாத திமுக அரசு சட்டசபைத் தேர்தலின் போது 550 அறிவிப்புகளை திமுக 2021 வெளியிட்டது. திமுக ஆட்சி அமைந்த உடன், அவை நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தனர். கடந்த காலத் தேர்தல் வாக்கெடுப்பு அறிக்கையில் கூட பல வாக்குறுதிகளை அளித்த திமுக, அவற்றில் பெரும்பாலானவற்றை அந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்த தவறிவிட்டது என்பதை மறுக்க முடியாது. செயற்கைகோள் நகரங்கள், ஒரு சர்வதேச விளையாட்டு நிறுவனம், ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு மையங்கள், அனைத்து மாவட்டங்களிலும் BPOக்களை உருவாக்குவது, கடலூரிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை, குறைந்தக் கட்டணத்தில் கேபிள் இணைப்பு என திமுக அரசால் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிப் பட்டியல் மிக நீண்டது.
2021 சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் 221வது வாக்குறுதியாக மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என கூறியதும், மேலும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு மின் உற்பத்தியை பெருக்கி வீடுகள், தொழிற்சாலைகள், விவசாயம் போன்றவற்றுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்து விட்டு இந்த ஊரடங்கு காரணமாக பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் பணி செய்பவர்கள், கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் ஆகியோர் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சென்னை கணிணி மையத்தில் மட்டுமே 2 நாட்களில் 13 ஆயிரத்தை தாண்டியது மின்தடை புகார்கள். அதிமுக ஆட்சியில் இருந்த போது கொரோனாக் காலத்தில் மின் கண்டணம் வசூலிக்க கூடாது, ரத்து செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவராக வலியுறுத்திய திரு. ஸ்டாலின் அவர்கள், முதல்வரான பின் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்?
இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு கூறியிருந்தது. அதனை நிறைவேற்றுவதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இல்லத்தரசிகளுக்கு விரைவாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, நிலுவையில் உள்ள கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கி கடன் தள்ளுபடி, மாணவர் கல்வி கடன் ரத்து செய்யப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1000 என்பது ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சொன்ன பல வாக்குறுதிகள், ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக அள்ளி வீசப்பட்டவையோ என்ற எண்ணம் மக்கள் இடையே ஏற்பட்டிருக்கிறது.
வழியின்றி தவிக்கின்ற இந்த நேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பின் விலைவாசி உயர்வு, மேலும் சுமையாக அமைந்துள்ளது. பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முக்கியமாக, கட்டுமான பொருட்கள், சிமெண்ட் கம்பி செங்கல், மணல் போன்ற பொருட்களை, அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க திமுக அரசு ஆவண செய்யும் என்று 468வது வாக்குறுதியாக சொல்லி விட்டு அண்டை மாநிலங்களில் ஒரு மூட்டை சிமெண்டின் விலை குஜராத்தில் 330 ரூபாய், புதுதில்லியில் 350 ரூபாய், ஆந்திராவில் 380 ரூபாயயாக இருக்கும்போது, ஒரே மாதத்திற்குள் தமிழகத்தில் 530 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெட்ரோலுக்கு 5 ரூபாய், டீசலுக்கு 4 ரூபாய், குறைக்கப்படும் என்று சொல்லிவிட்டு மாறாக பெட்ரோலுக்கு ரூபாயும். 5 டீசலுக்கு 4 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெருந்தொற்று காரணமாக மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 8000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று 123வது வாக்குறுதியாக அளித்து விட்டு 5000 ரூபாய் மட்டுமே கொடுத்தது மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. திமுக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்று... மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை காப்பாற்றாத திமுக அரசிற்கு இச்செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.”
Also Read: TN Corona Curfew: தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு!