தமிழ்நாடு முழுவதும் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதி எண்ணப்பட்டது. இதில், சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 1 வார்டில் பா.ஜ.க. உறுப்பினர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். இதுதொடர்பாக, அந்த வார்டில் தனியார் யூ டியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. ஒரு தாமரை மொட்டுவிட்டது இப்படிதானா? என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில் ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் என்பவர் பேசினார்.




அவர் பேசும்போது, தான் ஒரு இந்து தீவிரவாதி என்று கூறினார். அவரிடம் அந்த தொகுப்பாளர் நீங்கள் கோட்சே ஆதரவாளரா? என்று கேட்டபோது  தான் கோட்சே ஆதரவாளர் இல்லை என்றும், அதே சமயத்தில் கோட்சே திராவிடஸ்தான் கேட்ட பெரியாரை, தலித்திஸ்தான் கேட்ட அம்பேத்கரை, பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவை கொன்றிருக்க வேண்டும். அவர்களை கொன்ற பிறகு காந்தியை கொன்றிருக்க வேண்டும் என்று பேசியிருப்பார். 


மேலும் படிக்க : Kerala: திருமணத்தை மீறிய உறவு! கணவனுக்கு காப்பு மாட்ட கஞ்சா செடி ப்ளான்! பெண் கவுன்சிலர் கைது!


அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியது. அவரது பேச்சுக்கு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து, ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன் மீது காஞ்சிபுரம் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கண்ணதாசன் புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.




அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 153-கலகம் செய்ய தூண்டி விடுதல்,  153(ஏ)- சாதி, மத, இன தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டிவிடுதல், 505(1)(பி)-ஒரு மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை போலீசார் இன்று கைது செய்தனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பெரியாருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும், கண்டனங்களும் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : Crime: என்னை விட்டுவிட்டு வேறு நபருடன் உறவு... காதலரால் கொலை செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி !


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண